Sathya and Gowtham Plan to Kidnap Rohini in Marumagal Serial : கயல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமத்தில் ரோகிணியை கடத்திச் சென்று கௌதமிற்கு திருமணம் செய்து வைக்க சத்யா திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
கயல் மற்றும் மருமகள் இருவரும் இணைந்து நடக்கும் மகா சங்கமம் எதிர்பாக்காத அளவு சுவாரஸ்யமாக இருக்கின்றது. ரோகினியை கடத்த திட்டமிட்டுள்ளனர் சத்யா மற்றும் கௌதம் ஆனந்தியை பற்றி தவறுதலாக மீனாட்சியிடம் சொல்லும் வடிவு என்ன நடக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
கயல் மற்றும் மருமகள் சீரியல்
கயல் மற்றும் மருமகள் இணைந்து நடக்கும் மகா சங்கமத்தில் இன்றைய எபிசோடில், முதலில் ரோகினி திருமணம் செய்வதற்கு போகும் முன் தன் அப்பாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மாத்திரை அவர் பேக்கிலே இருப்பதால் தன் அப்பாவின் வழியை தாங்க முடியாமல் அங்கிருந்து திரும்பி வந்தார். மாத்திரைகளை அப்பாவிடம் கொடுத்துவிட்டு கௌதமுடன் திருமணம் செய்ய செல்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். மீண்டும் அந்த இடத்தில் இருந்து கிளம்பினார். அப்பொழுது பிரபுவிற்கு காலில் ஒரு பெரிய பாட்டில் துண்டு குத்து கிழித்து விடுகிறது. அதனால் வழியில் துடிக்கிறார் பிரபு. அந்த வலியை தாங்க முடியாமல் கத்தி கதறுகிறார் பிரபு. அதனை கண்ட ரோகினி அங்கிருந்து அண்ணா என்று ஓடி வருகிறார்.
34
அண்ணனின் பாசம் புரிந்த ரோகினி:
பிரபுவிடம் அப்பா நான் படவேண்டிய கஷ்டமெல்லாம் நீ பட்டுகிட்டுறிக்கியே பிரபு என்றுஅப்பா சொல்ல ரோகிணியும் ரேவதியும் என் மகள்கள்தான என்று சென்டிமென்டாக பேசுகிறார் பிரபு. அதனைக் கேட்டு ரோகிணி தன் அண்ணனின் உணர்வை புரிந்து கொண்டு அண்ணன் மேல் சாய்ந்து அழுது கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு ஆதிரை அந்தப் பாட்டில் தூண்டினை மெதுவாக காலில் இருந்து எடுக்கிறார். வலி தாங்க முடியாமல் பிரபு கத்தி கதறுகிறார். அதன் பிறகு ஆதிரை மெதுவாக அந்த பாட்டில் துண்டை எடுத்துவிட்டு ரத்தம் வழிந்ததை துடைத்து அதற்கு கட்டு போடுகிறார்.அதன் பிறகு மெதுவாக பிரபு மற்றும் மோகினியை கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார். பரிகாரம் பூஜை செய்வதற்காக ரோகினி மற்றும் பிரபு அழித்துக் கொண்டு அனைவரும் செல்கின்றனர்.
44
ரோகினியை கடத்த திட்டமிடும் சத்யா:
ரோகினி கல்யாண திருமணம் செய்வதற்கு செல்லாமல் தன் குடும்பத்துடனே இருப்பதால் நீ எப்போ கல்யாணம் பண்ண போற என்று கௌதமை வஞ்சகத்தின் மூலம் கேட்கிறார். வரமாட்டா நீ தான் அவளை கல்யாணம் பண்ணனும் என்று வன்மையாக பேசுகிறார். நீதான் ரோகினிய கடத்திட்டு அவ கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு வா என்று திட்டமிடுகிறார் சத்யா. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.