சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வீட்டில் நடத்திய பூஜையில், மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து இருப்பதாக பெண் சாமியார் கூறி உள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை எப்படியாவது வீட்டை விட்டு விரட்டிவிட்டால் தன்னுடைய மூத்த மகன் மனோஜுக்கு பணக்கார வீட்டு பெண்ணை பார்த்து மறுமணம் செய்துவைத்துவிடலாம் என்கிற பிளானில் விஜயா இருக்க, அவர் தன்னுடைய வீட்டில் ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார். அதுபற்றி மீனாவிடம் சொன்னதால், அவர் பூஜைக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். பின்னர் அங்கு வரும் அண்ணாமலை, எதற்காக இதெல்லாம் செய்யுற என கேட்க, அத்தை தான் பூஜைக்கு எடுத்து வைக்க சொன்னாங்க, என்ன பூஜை என தெரியவில்லை என மீனா கூறுகிறார்.
25
பூஜை நடத்தும் விஜயா
பின்னர் அந்த வீட்டிற்கு பெண் சாமியார் வருகிறார். அவரை வாசலில் சென்று வரவேற்ற விஜயா, பூஜை நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்று அமர வைக்கிறார். அங்கே அமர்ந்த அந்த பெண்ணை பார்த்ததும் இந்த அம்மாவை பார்த்தாலே ஏதோ ஃபிராடு மாதிரி தான் தெரியுது என சொல்கிறார். பின்னர் பூஜையை ஆரம்பிக்கும் அந்த பெண், தனக்கு சாமி வந்தது போல் நடித்து, மனோஜின் பிரச்சனைகள் அனைத்தையும் புட்டு புட்டு வைக்கிறார். இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் உன்னுடைய ரெண்டாவது மருமகள் தான் காரணம் என அந்த பெண் சாமியார் சொன்னதும் மீனா மிரண்டு போகிறார்.
35
மீனாவால் அண்ணாமலைக்கு ஆபத்து
உன்னோட ரெண்டாவது மருமகள் வீட்டில் இருந்தால் உன்னோட தாலி நிலைக்காது என அந்த பெண் சாமியார் சொன்னதைக் கேட்டதும் மீனா கண்ணீர் விட்டு அழுகிறார். இதைக்கேட்டு கடுப்பான முத்து, முதல்ல நீ எழுந்திருச்சு வெளிய போமா என விரட்டப்பார்க்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் பெண் சாமியார், இந்த வீட்டில் சிக்கல் இருக்கு, இந்த பொண்ணு இங்க இருந்தால் உன்னுடைய புருஷன் உயிருக்கு ஆபத்து என சொன்னதும், குறுக்கிடும் முத்து, எனக்கு என்னமோ அம்மா தான் இந்த பொம்பளைய செட் அப் பண்ணி வர வச்சிருப்பாங்களோனு தோணுது என கூறுகிறார்.
ரவியும், எனக்கும் டவுட்டா தான் இருக்கு. அம்மா இது உங்க வேலை தானா என கேட்கிறார். இதைக்கேட்டு பதறிப்போகும் விஜயா, டேய் நான் ஏண்டா இப்படியெல்லாம் செய்யப்போறேன் என கூறுகிறார். நான் சொல்றது தெய்வ வாக்கு என அந்த பெண் சாமியார் சொல்ல, ஒரு புண்ணாக்கும் வேணாம் முதல்ல நீ இப்போ கிளம்புறியா இல்லையா என முத்து மிரட்டுகிறார். அந்த பெண் திரும்ப திரும்ப மீனா இங்க இருந்தா விஜயாவின் தாலி இறங்கிடும் என சொல்லிக்கொண்டே இருந்ததால் கடுப்பான முத்து, அங்கிருந்த குத்து விளக்கை எடுத்து, நீ இங்க இருந்து போகலேனா நடு மண்டையிலேயே நச்சுனு இறக்கிவிடுவேன் என மிரட்டுகிறார். இதையடுத்து அந்த பெண் சாமியார் அங்கிருந்து பதறியடித்து ஓடுகிறார்.
55
குஷியில் சிந்தாமணி
அவர் முத்து வீட்டில் இருந்து வெளியேறி நேராக ஒரு காரின் அருகே செல்கிறார். அங்கு காரில் இருந்து இறங்கி வரும் சிந்தாமணி, நான் சொன்னபடி எல்லாம் கரெக்டா சொல்லிட்டியா என சொன்னதும், நான் சொன்னதை கேட்டு விஜயா மிரண்டு போயிட்டா, இருந்தாலும் அவளோட பையன் முத்து தான் என்னை அடிக்க வந்துட்டான். அதான் ஓடி வந்துட்டேன் என கூறுகிறார். சரிவிடு, இனிமே அவளால நிம்மதியா இருக்க முடியாது. இனி அந்த மீனாவை வீட்டை விட்டு விரட்டிவிட தான் பார்ப்பாள். நம்ம பிளான் சக்சஸ் என குஷியில் இருக்கிறார் சிந்தாமணி. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.