Rohini Cries to Doctor Abortion For Mother Life in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் ரோகிணி தனது அம்மாவின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்க துணிந்துள்ளார்.
கார்த்திகை தீபம் சீரியலில் ஜோதிடர் சொன்னது உண்மை என்று நம்பி ரோகிணி விபரீத முடிவை எடுத்துள்ளார். அதோடு சந்திரகலாவின் டிராமாவும் ரோகிணியை பாதித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரோகிணி கர்ப்பமான நிலையில், தனது வீட்டில் சொல்ல வரும் நிலையில், மகள் மூலமாக வரும் குழந்தையால் சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர் சொன்னதாக சந்திரகலா டிராமா ஆடினார்.
27
கார்த்திகை தீபம் கார்த்திக் அதிரடி
கடைசி வரை இது தான் உண்மை என்று நம்ப வைத்தார். அப்போது கார்த்திக் ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி, ராஜராஜனும் போன் போட்டு ஜோதிடரை வர வைத்து ரோகிணியின் ஜாதகத்தை பார்த்தனர். அதில், உங்களது பெரிய பொண்ணுக்கு குழந்தை பிறந்தால் உங்களது உயிருக்கு ஆபத்து என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதில் துளி கூட நம்பிக்கை இல்லாத கார்த்திக் நேராக ஜோதிடரின் வீட்டிற்கு சென்ற கார்த்திக் உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பினார்.
37
Rohini emotional scene Karthigai Deepam
ஆனாலும், ஜோதிடரும் தான் சொன்னது உண்மை தான் உண்மை தான் என்றார். அப்போதும் சந்தேகத்துடன் கார்த்திக் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். உண்மையில் ரோகிணிக்கு குழந்தை பிறந்தால் பிரிந்திருந்த ரெண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்துவிடும் என்று தெரிந்து கொண்ட சந்திரகலா இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றினார். தனது நாடகத்தை உண்மை என்று நம்ப வைக்க கார் விபத்துக்கும் ஏற்பாடு செய்தார்.
47
Zee Tamil Serial Updates 2026
அதன்படி சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது சிவனாண்டி ஏற்பாடு செய்து வைத்த கார் டிரைவர் கச்சிதமாக இந்த வேலையை செய்து முடித்தார். மேலும், சந்திரகலா எதிர்பார்த்தபடி சாமுண்டீஸ்வரிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர், மருத்துவமனைக்கு சென்று தலையில் கட்டு போட்டு வீட்டிற்கு வந்தனர்.
57
Karthigai Deepam Serial Today Episode
எல்லோரும் என்னாச்சு என்னாச்சு என்று கேட்க, எல்லாம் உன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தையால் தான் என்று சந்திரகலா தனது நாடகத்தை தொடங்கினார். ஜோதிடர் தான் சொன்னாரே, உனக்கு பிறக்கும் குழந்தையால் தான் அக்காவின் உயிருக்கு ஆபத்து. இதுவே நானாக இருந்தால் இந்த நேரம் என்னுடைய குழந்தையின் கருவை கலைத்திருப்பேன். எனக்கு இவ, அக்கா கிடையாது ஒரு அம்மா. அதனால் தான் என்னுடைய புருஷனையும் விட்டு விட்டு நான் அக்காவோடு இருக்கிறேன் என்றார்.
67
Karthigai Deepam Rohini Abortion
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரோகிணி தனது அறைக்கு சென்று குழந்தையின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று தான் 3 மாதம் முடிந்து 4 மாதம்கர்ப்பமாக இருக்கும் சூழலில் இந்த குழந்தை வேண்டாம். என்னுடைய குடும்ப சூழல் காரணமாக நான் கருவை கலைக்க வந்திருக்கிறேன். ஜோதிடர் தான் என்னுடைய அம்மாவின் உயிருக்கு ஆபத்து என்று கூறினார். அதன்படி தான் நானும் இப்போது என்னுடைய குழந்தையின் கருவை கலைக்கிறேன். அப்படி நான் கருவை கலைக்கவில்லை என்றால் மன அழுத்தத்தாலே நானும் இறந்துவிடுவேன், வயிற்றில் வளரும் குழந்தையும் இறந்துவிடும்.
77
Karthigai Deepam Rohini Pregnant Abortion
அதற்கு பதிலாக நானே என்னுடைய கருவை கலைத்துவிடுகிறேன் என்றார். அதற்கு பதிலளித்த டாக்டர் தன்னால் முடியாது என்றும், இந்த காலத்தில் ஜோதிடம், சாஸ்திரம் என்று நம்பிக் கொண்டிருப்பதா? என்று கேள்வி எழுப்பியதோடு முடியாது என்று கூறினார். அப்போதுதான் டாக்டரின் காலில் விழுந்த ரோகிணி தனக்கு இந்த உதவியை செய்யும்படி கேட்க, டாக்டரும் அடுத்த நாள் காலையில் எதுவும் சாப்பிடாமல் வர சொன்னார். பின்னர் வீட்டிற்கு வந்த ரோகிணி மீண்டும் குழந்தையின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு கதறி அழுதார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய 1130ஆவது எபிசோடு முடிந்தது. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.