என் மகனை நெருங்காதே! - ஆனந்தியை எதிர்க்கும் அன்புவின் அம்மா! அக்காவுக்காக ஆனந்தி எடுத்த விபரீத முடிவு.. சிங்கப் பெண்ணே ஹைலைட்ஸ்!

Published : Feb 23, 2026, 03:40 PM IST

Singappenne Serial Anandhi Entry to Anbu House : சிங்கப் பெண்ணே சீரியல் ஆனந்தி தன் அக்காவின் வாழ்விற்காக அன்புவின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்த நிலையில் என்ன நடக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
SUN TV Singapennae Serial Today Episode in Tamil

சிங்கப் பெண்ணே சீரியல் நேற்றைய எபிசோடில் ஆனந்தியை கோகிலாவின் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் நீ அன்பே வீட்டிற்கு சென்றால்தான் உன் அக்கா என் மகனுடன் சேர்ந்து வாழ்வாள் என்று கட்டளை இட்டனர். அதனைக் கேட்ட ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர். நான் அங்கு போய் வாழ்றது நிச்சயமில்ல என்று ஆனந்தி சொல்லினார். உங்க அக்காவும் எங்க வீட்ல வாழ்றது நிச்சயம் இல்லை என்று கோகிலாவின் மாமனார் கடுமையாக பேசிவிட்டு சென்றுள்ளார்.அதனை கேட்டு மிகவும் வருத்தத்துடன் ஹாஸ்டலுக்கு ஆனந்தி மற்றும் கோகிலா இருவரும் வந்தனர்.

25
அப்பாவிற்கு விஷயத்தை சொல்லும் கோகிலா:

ஆனந்தி மற்றும் கோகிலா இருவரும் ஹாஸ்டலுக்கு வந்த பிறகு அப்பா கோகிலாவிற்கு ஃபோன் செய்கிறார். கோகிலா போனை எடுத்து சொல்லுங்கப்பா என்று கோகிலா கேட்க, நீங்கதாம்மா சொல்லணும் என்று கோகிலாவின் அப்பா சொல்கிறார். நீங்க உன் மாமனார் மாமியார பாத்துட்டீங்களா அவங்க என்ன சொன்னாங்க கேக்குறதுக்கு நானும் உங்க அம்மாவும் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார் கோகிலாவின் அப்பா.சந்தோசமான விஷயம்னா நீயே போன் பண்ணி இருப்பேல.சொல்ல முடியாத விஷயங்கள் தானே இவ்வளவு நேரம் போன் பண்ணாம இருக்க இன்று கோகிலாவின் அம்மா கேட்க மனம் வருத்தத்துடன் கண் கலங்கியபடி நிற்கிறார் கோகிலா.

35
Anandhi and Anbu Scenes in Singapennae Serial,

இவ்வளவு நேரம் ஆகியும் ஒரு வார்த்தை கூட பேசலனா ஏதும் பிரச்சனையா என்று கேட்கிறார். என்ன சொன்னாங்க உங்க அத்தையும்,மாமாவும் என்று கேட்டார் கோகிலாவின் அம்மா கேட்க.ஆனந்தி எதுவும் பேச முடியாமல் மனம் வலியுடன் இவர்கள் பேசுவதை கண்டு பின்புறமாகவே நின்று கொண்டிருக்கிறார். ஊர்ல இருந்து பைய தூக்கிட்டு வந்து பஞ்சாயத்து பண்ணி ஆனந்தி அன்பு வீட்ல போயி வாழனும்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க. என்று சொல்கிறார் கோகிலா. என்னடி சொல்ற மாப்பிள்ளை வீட்டுக்கா அங்கு எப்படி ஆனந்தி போவ என்று கேட்கிறார் கோகிலாவின் அம்மா. அதைக் கேட்டால் ஆட்டோலேயும் கார்லையும் போற மாதிரி ஈஸியா சொல்றாங்க. நம்ம பேசுறதையே அவங்க கேட்கவே வரலாமா அவங்க சொல்றது தான் நம்ம செய்யணும் சொல்றாங்க.

45
தன் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படும் கோகிலா:

விடுமா என் தலையெழுத்து என்னவோ அப்படித்தானே நடக்கும் என்று வருத்தத்துடன் பேசுகிறார் கோகிலா. ஆனந்தி அன்பு வீட்டிற்கு போயி வாழலைன்னா அவங்க பையனுக்கு இன்னொரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிடுவாங்கன்னு சொல்றாங்க. அய்யய்யோ என்ன சொல்ற நீ கொஞ்சம் பொறுமையா பேசுனியா இல்லையா என்று கோகிலாவின் அம்மா கேட்க அம்மா இந்த வார்த்தை சொன்னதுக்கு அப்புறம் எப்படி பொறுமையா பேச முடியும். நீங்க என்ன வேணாலும் செய்ங்க எனக்கு என் தங்கச்சியோட வாழ்க்கை தான் முக்கியமுனு சொல்லிட்டேன். என்று சொல்லும் பொழுது ஆனந்தி கோகிலா மற்றும் அவரது அம்மா அப்பா அனைவரும் அழுது கொண்டே இருக்கின்றனர்.

55
Singappenne

அன்பு வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கும் ஆனந்தி: தன் அக்காவின் நிலைமைகளை யோசித்துப் பார்த்தும் தன் அக்கா பேசியதும் கண்டும் ஆனந்தி அன்பு வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories