மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!

Published : Feb 23, 2026, 04:41 PM IST

Sathya Feelings Lonely and Selvanayagi Strong Decision For Arjun : ஆடுகளம் சீரியலில் சத்யா தனக்கு யாருமே இல்லை என்று தவிப்பதாக கூறி தனது தோழியிடம் அழுது புலம்பும் காட்சி காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

PREV
15
Aadukalam Serial Today Episode

சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்றுதான் ஆடுகளம். இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த இந்த சீரியல் இப்போது பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிப்ரவரி 23ஆம் தேதியான இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி ஹைலைட்ஸாக பார்க்கலாம். செல்வநாயகி தனது மகனுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கும், பிஸினஸ் நஷ்டத்திற்கும் சத்யாவின் வளர்ப்பு அப்பாவான நளனின் சொத்தை எழுத திட்டமிட்டார். இதற்கான எல்லா வேலைகளையும் செய்து பத்திரப்பதிவிற்கும் ஏற்பாடு செய்தார். நளனும் தனது மகள் ஆர்த்தியும் சேர்ந்து வந்து முதலில் சத்யாவின் பெயருக்கு எல்லா சொத்துக்களையும் எழுத முன் வந்தனர். அதன் பிறகு அந்த சொத்துக்களை செல்வநாயகி தங்களுக்கு மாற்றி எழுத திட்டமிட்டார்.

25
Arjun and Sathya Love Scenes

ஆனால், சத்யாவின் அம்மா இந்த சொத்துக்களை சத்யாவிற்கு எழுதி தர முன் வரவில்லை. உண்மையில் சத்யா தனது மகள் இல்லை என்றும், அவள் தனது வளர்ப்பு மகள் தான் என்றும் செல்வநாயகியிடம் சொல்ல இருப்பதாக எல்லோரையும் பிளாக்மெயில் செய்தார். இதனால் நளன் மட்டுமின்றி அவரது உண்மையான மகள் ஆர்த்தியும் எவ்வளவோ சொல்லியும் சத்யாவின் அம்மாவான காமாட்சி கேட்கவேயில்லை.

35
Arjun Decision against Selvanayagi

இது ஒரு புறம் இருக்க சத்யாவின் கணவரும், செல்வநாயகியின் மகனுமான அர்ஜூன், செல்வநாயகி பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே அவருக்கு போன் போட்டு நளனின் சொத்து எதுவும் தனக்கு தேவையில்லை என்றும், அவரை பழி தீர்க்க வேறு வழியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார். இதில் செல்வநாயகிக்கு உடன்பாடில்லை. வேறு வழியில்லாத அர்ஜூன், இந்த சொத்துக்களை நீங்கள் மாற்றினால் என்னை உயிருடன் பார்க்க முடியாது என்றார்.

45
Aadukalam Serial Today Update

தனக்கு இந்த சொத்துக்களை விட தனது மகன் தான் முக்கியம் என்று இந்த பத்திரப்பதிவை ரத்து செய்துவிட்டு உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுனால் வரையில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவரும் தனக்கு எதிரிகளாகிவிட்டார்கள் என்று சத்யா தனது தோழியிடம் கூறி அழுதார். அப்போது நீ கர்ப்பாமாக் இருக்கும் விஷயத்தை உன்னுடைய கணவர் அர்ஜூனுக்கு தெரியப்படுத்து அவரது ஆதரவு உனக்கு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது என்றார்.

55
ஆடுகளம் சீரியல் இன்றைய எபிசோடு

அதன்படி, சத்யா, அர்ஜூனுக்கு சிறிய பரிசு ஒன்றை கொடுத்தார். அதனை அர்ஜூன் எடுத்து பார்ப்பது போன்ற காட்சியோடு ஆடுகளம் சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி, நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். சத்யா கொடுத்த பரிசை அர்ஜூன் திறந்து பார்ப்பாரா? சத்யாவின் பரிசில் என்ன இருக்கிறது என்று பல கேள்விகளுடன் நாளைய எபிசோடை பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories