சிறைக்கு செல்லும் ரேவதி? ஆதிரை குடும்பத்தில் அடுத்த பூகம்பம்! அன்பு வடிவின் சதி அம்பலமாகுமா? இன்றைய மெகா அப்டேட்!

Published : Feb 13, 2026, 06:53 PM IST

Marumagal Serial Today Episode Revathi Arrest Police : மருமகள் மற்றும் கயல் சீரியல்கள் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Marumagal Serial Today Episode

கயல் மற்றும் மருமகள் சீரியல்கள் இணைந்து நடக்கும் மகா சங்கமம் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. மீனாட்சி அம்மாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆனந்திக்கும் கௌசிக்கும் நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டுள்ள அனைவரும் அந்த ஹோட்டலில் இருக்கின்றனர். ஆனந்திக்கு மீனாட்சி அம்மா அன்பாக ஒரு வைரம் செயினை பரிசாக அளிப்பதற்காக வாங்கி வந்துள்ளார் அதனை அனைவரிடமும் காட்டி மகிழ்ச்சி அடைந்தார் அனைவரும் அதனை கண்டு மகிழ்ந்தனர். பிறகு மீனாட்சி அம்மா அந்த அறைக்குச் சென்று நெக்லஸை தன்மகன் கௌசிக்கிடம் காட்டும்போது நெக்லஸ் அதிலிருந்து காணவில்லை. சத்யா மற்றும் வடிவு இருவரும் இந்த குடும்பம் சந்தோஷமா இருக்கிறது எனக்கு பிடிக்கல என் குடும்பம் எனக்கு சந்தோஷமாக இருக்க பிடிக்கல என்று இருவரும் கலந்து பேசிக்கொண்டு சூழ்ச்சி செய்கின்றனர். இருவரும் சேர்ந்து இந்த குடும்பத்தை நடுத்தெருக்கு கொண்டு வர வேண்டும் என்று திட்டமிடுகின்றனர்.

25
அன்பு வடிவு சத்யா சூழ்ச்சி

அந்த நெக்லஸை ரேவதி தனது கழுத்தில் வைத்து பார்த்து இது சூப்பரா இருக்கு நான் டிவில விளம்பரம் வந்தா கூட ஆனு பாப்பா எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றெல்லாம் தனது ஆசையை அவரிடம் சொன்னார் ஆனால் அதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு பிரபுவை பழிவாங்கும் எண்ணத்தில் ரேவதி மீது திருட்டுப்பழி சுமத்தி பிரச்சனையை செய்வோம் என்று திட்டமிட்டனர். மீனாட்சி கயல் மற்றும் கயல் குடும்பத்தாரிடம் நான் ஒரு வைர நெக்லஸ் கொண்டு வந்து காட்டுனேல இப்ப அதைக் காணோம் என்று அனைவரிடமும் சொல்கிறார் அனைவரும் அதிர்ச்சியில்உள்ளனர்.

35
ரேவதி திருட்டுப்பழி மருமகள் சீரியல்

அந்த இடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது வடிவு அங்கு வந்து எனக்கு டவுட்டு அந்த ரேவதி பொண்ணுதான். அவள் தான் நெக்லஸை நான் பார்த்ததே இல்லை ரொம்ப பிடிக்கும் எனக்கு ரொம்ப ஆசை அப்படி எல்லாம் சொன்னா எனக்கு அவ தான் எடுத்து இருப்பான்னு நினைக்கிறேன் என்று வஞ்சகத்தை கொட்டுகிறார் வடிவு. அங்கு பேசிக் கொண்டிருந்த ரேவதியை தரதரவென்று இழுத்து வந்து இவள் தான் திருடியிருப்பா இவ்வளவு கேளுங்க என்று வடிவு கேட்க. கயல் அவ எடுத்திருக்க மாட்டா எதுக்கு தேவ இல்லாம பேசுறீங்க . நம்ம எல்லாருமே தேடுவோம் என்று கயல் சொல்ல அதை மறுத்து வடிவு இவன் தான் எடுத்து இருப்பா என்று பழி சுமத்தினால். ரேவதி நான் எடுக்கவே இல்ல நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல என்று அழுது பேசுகிறாள் .ஆனால் வடிவு இவதான் எடுத்திருப்பார் என்று கூறிக் கொண்டே இருந்தாள். அங்கிருந்து வந்த சத்யா எதுக்கு தேவை இல்லாம பேசுறீங்க ரேவதி அப்படிப்பட்ட பொண்ணு இல்ல எங்களுக்கெல்லாம் இந்த மாதிரியான எண்ணமே வராது என்று அவர்களிடம் நடித்துக் கொண்டு பேசினாள்.

45
Marumagal Serial Today Twist and Review

ஆனால் அது எல்லாம் ஒப்புக்கொள்ளாத வடிவு இவதான் எடுத்திருப்பாள் என்று ஆணித்தனமாக கூறினார். அதன் பிறகு பிரபு மற்றும் ஆதிரை இருவரும் வர என்னாச்சு இங்கே என்ன பிரச்சனை என்று பிரபு கேட்க உங்க தங்கச்சி வைர நெக்லஸ திருடிட்டாள் என்று வடிவு சொன்னாள்.நாங்கள் அந்த மாதிரி குடும்பம் கிடையாது நாங்க கஷ்டப்படுற குடும்பம் தான் ஆனா எங்களுக்கு திருட்டு புத்தி எல்லாம் கிடையாது என்று பிரபு சரியாக பேசினார். நீங்க தான் எடுத்து இருப்பீங்க என்று வடிவு விடாப்பிடியாக இருந்தார். அவங்க அந்த மாதிரி கிடையாது என்று அவர்களுக்கு சப்போர்ட்டாக கயல் பேச . அதெல்லாம் நீங்க சொல்லாதீங்க அக்கா.எடுத்தவங்க யாரு என்ன நம்ம பாக்கணும் என்று வடிவுக்கு சப்போர்ட்டாக அன்பு பேசுகிறார். 

55
Revathi Arrest Scene Marumagal Serial

ரேவதி பேக்ல போய் செக் பண்ணி பாருங்க நெக்லஸ் இருக்கா இல்லையா என்று சொல்கிறார் வடிவு. அவள் சொல்வதைக் கேட்டு அன்பு ரேவதியின் பேக்கே செக் பண்ணி பார்க்கும்போது அதற்குள் வைர நெக்லஸ் மற்றும் வைரத்தோடு இரண்டும் இருந்ததே கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். ரேவதியை விட்டுவிடக் கூடாது என்று அன்பு போலீசார்க்கு போன் செய்கிறார். ரேவதி அழுதபடி நான் போக மாட்டேன் போக மாட்டேன் நான் ஒன்னும் தப்பு பண்ணல நான் எடுக்கல என்றெல்லாம் கத்தி புலம்புகிறாள் ஆனால் அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத அன்பு ரேவதியை போலீஸ் வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்க முயற்சிக்கிறார். அப்போது அன்புக்கும் பிரபுவுக்கும் சண்டை ஏற்படுகிறது. இருவரும் சட்டையை பிடித்தபடியே சண்டை போடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories