Siragadikka Aasai : மனோஜ் - கனகாவின் திருமணத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய ட்விஸ்ட்... அடிபொலி எபிசோடு இதோ

Published : Jul 10, 2026, 09:14 AM IST

Siragadikka Aasai Serial 10 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் - கனகாவின் திருமணத்தின் போது பல எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி உள்ளன. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், ரோகிணி கனகாவுக்கு மேக்கப் செய்து முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது அவரை மொட்டை சந்தோஷ் பார்த்துவிடுகிறார். ஆனால், "என்னுடைய நண்பரின் திருமணத்திற்குத்தான் வந்திருக்கிறேன்" என்று கூறி ரோகிணியிடம் சமாளிக்கிறார். அதன்பிறகு, சந்தோஷிடம் தனது 5 லட்சம் ரூபாய் குறித்து ரோகிணி கேட்க, "விரைவில் கொடுத்துவிடுகிறோம்" என்று உறுதியளித்து அவரை அனுப்பி வைக்கிறார்.

Siragadikka Aasai : விஜயாவிடம் பொய் சொல்லி எஸ்கேப் ஆன மனோஜ்... கல்யாண வீட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்

25
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த சந்தோஷ்

இதற்கிடையில், சந்தோஷை முத்துவும் மீனாவும் பார்த்து, அவர் அங்கு என்ன செய்கிறார் என்று விசாரிக்கிறார்கள். அதற்கு, நண்பரின் திருமணம் என்று கூறி சமாளிக்கும் சந்தோஷிடம், "மனோஜுக்காக இந்தப் பெண்ணைப் பார்த்தது நீங்கள்தானே? மனோஜ் மறுத்ததால் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்கிறீர்களா?" என்று கேட்கிறார்கள். அதற்கும் எப்படியோ சமாளித்துவிட்டு, சந்தோஷ் அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

35
ஜோதிடரின் பலே ஐடியா

அதன்பின், மனோஜிடம் சென்று, முத்து, மீனா, ரவி மற்றும் ஸ்ருதி ஆகியோர் திருமண நடக்கும் இடத்திலேயே இருப்பதாகவும், அவர்கள் திருமண ஏற்பாடுகளையே கவனித்து வருவதாகவும் கூறுகிறார். இதைக் கேட்டு மனோஜ் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றமடைகிறார். அந்த நேரத்தில், ஜோதிடர் மணப்பெண்ணின் தாயாரை தனியாக அழைத்து, முத்துவும் ரவியும் மனோஜின் சகோதரர்கள் என்றும், அவர்கள் அங்கு இருந்தால் இந்தத் திருமணத்தை தடுக்கக்கூடும் என்றும் எச்சரிக்கிறார். இதனால், மணப்பெண் வீட்டார் முத்து, மீனா, ரவி, ஸ்ருதி ஆகியோரிடம் திருமணம் நடக்க தாமதமாகும் என சொன்னதும், அவர்களும் தங்களுக்கு வேலை இருப்பதாக கூறி அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள்.

45
முத்து ரிட்டர்ன்ஸ்

அவர்கள் சென்றுவிட்டதாக நினைத்து மனோஜை கீழே அழைத்து வருகிறார்கள். ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக முத்து மீண்டும் அங்கு வருகிறார். இதைப் பார்த்த மனோஜ் பதற்றத்தில் ஒளிந்துகொள்கிறார். பின்னர், மீனா தனது பர்ஸை மறந்துவிட்டதால் அதை எடுக்கத்தான் முத்து திரும்பி வந்தது தெரியவருகிறது. பர்ஸை எடுத்துக்கொண்டு அவர்கள் மீண்டும் கிளம்பிச் செல்கிறார்கள்.

55
விஜயாவிடம் சிக்குவாரா மனோஜ்?

இதையடுத்து, எந்தத் தடையும் இல்லாமல் மனோஜ், கனகாவின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு வழக்கம்போல் கோயிலுக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். ஆச்சரியமாக, அவர்கள் செல்லும் கோயில், விஜயா செல்ல விரும்பிய அதே கோயிலாக இருக்கிறது. அங்கு பார்வதியுடன் விஜயா சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், புதுமணக் கோலத்தில் மனோஜும் கனகாவும் கோயிலுக்கு வருகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. மனோஜை விஜயா பார்ப்பாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories