Siragadikka Aasai Serial 08 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் திருமணம் என தெரியாமல் முத்து, மீனா, ஸ்ருதி, ரவி கிளம்பி சென்றுள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்திருக்கு அப்படிங்கறத பார்க்கலாம். விஜயா மனோஜ கோயிலுக்கு போயிட்டு பரிகாரம் பண்ணனும்னு கூப்பிடுறாங்க. ஆனா மனோஜுக்கு கல்யாணம் இருக்கு இல்லையா, அவரே வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்றாப்ல அதனால என்னால வர முடியாது என்னோட பிரண்டோட கல்யாணம், அவன் எனக்கு டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்திருக்கான். அப்படி இப்படின்னு மனோஜ் சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கறாப்பல. விஜயா எவ்வளோ கூப்பிட்டும் மனோஜ் முடியாதுனு சொல்லிவிடுகிறார்.
அதுக்கப்புறம் என்ன, நம்ம மனோஜ் நான் போய் பிரண்டோட கல்யாணத்துக்கே கிளம்புறேன் அப்படின்னு சொல்லிட்டு தன்னோட கல்யாணத்துக்கே ரெடி ஆயிட்டு இருக்கறாப்ல, இந்த பக்கம் மீனா, முத்துவை அழைச்சுக்கிட்டு போயிட்டு நீங்க இதுக்கப்புறம் இந்த மாதிரிதான் டிரஸ் பண்ணனும் அப்படின்னு ஒரு ஆபீசர் மாதிரி டக் இன் பண்ற மாதிரி டிரஸ் எல்லாம் கொடுத்து போட்டுக்கிட்டு வாங்க அப்படின்னு சொல்லி, முத்துவோட கெட்டப்பையே மாத்திடுறாங்க. அதுக்கப்புறம் முத்துவோட கெட்டப்ப பாத்துட்டு விஜயா அண்ணாமலையே அசந்து போறாங்கன்னா பாத்துக்கோங்களே, அந்த அளவுக்கு இன் பண்ணிக்கிட்டே சும்மா டிப் டாப்பா இருக்கறாப்பல முத்து.
34
ஷாக் கொடுத்த மனோஜ்
அதுக்கப்புறம் மீனா போயிட்டு ஸ்ருதிக்காக கல்யாணத்துக்கு கேசரி எல்லாம் பண்ணி கொடுக்குறாங்க. மனோஜ் ஒரு பக்கம் ரெடி ஆகிட்டு இருக்கறாரு. மனோஜ் பட்டு வேஸ்டி சட்டையில ரெடியாகி வந்ததை பாத்துட்டு எல்லாருமே ஷாக் ஆகுறாங்க. என்னடா உன் பிரண்டோட கல்யாணம்னு சொன்ன, நீ மாப்பிள்ளை மாதிரி ரெடி ஆயிருக்க அப்படின்னு கேக்குறாரு முத்து. என் பிரண்ட் தான்டா வாங்கி கொடுத்தான் அப்படின்னு வாய் கூசாம நம்ம மனோஜ் பொய் சொல்றாப்ல. அதுக்கப்புறம் என்ன ஸ்ருதி, ரவி, மீனா, முத்து
ஏன்னா இவங்கதானே ஆர்டர் எடுத்திருக்காங்க. அவங்களுக்கு தெரியாது அது மனோஜோட கல்யாணம்னு. இறுதியாக கல்யாண பொண்ணு வீட்டை காமிக்கிறாங்க கல்யாண பொண்ணு கனகா ஒரு மனநால பாதிக்கப்பட்ட பொண்ணு அப்படிங்கறதுனால சேலை கட்டிக்க மாட்டேன் அப்படின்னு அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்கு. அதுக்கப்புறம் அவங்க அம்மாதான் வந்து உனக்கும் மனோஜ்-க்கும் தான் கல்யாணம் நடக்க போகுது, அதுக்கப்புறம் நீ மனோஜ் கூடயே போயிட்டு அவன் கடையிலேயே உட்கார்ந்து பிரிட்ஜ பாத்துக்கிட்டே இருக்கலாம் அப்படின்னு சொன்ன உடனே அந்த பொண்ணு அடங்கிடுது.
முத்து அந்த வீட்ல வந்து டெக்கரேஷன் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கறாப்ல. மாப்பிள்ளை வந்துட்டாரு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. இதோட இன்றைய எபிசோடு முடிஞ்சிருச்சு. வெயிட் பண்ணி பார்க்கலாம் நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு.