சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகைகள்.... இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷனில் அன்லிமிடெட் கவர்ச்சிகாட்டி கோடிக்கணக்கில் வசூல் வேட்டை

Published : Jul 07, 2026, 01:48 PM IST

Serial Actress Instagram Subscription : தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகைகள் சிலர் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மிகப்பெரிய தொகையை சம்பாதித்து வருகின்றனர்.

PREV
15
Serial Actress Instagram Subscription Earnings

இன்ஸ்டார்கிராம் தான் இன்றைய இளசுகள் மத்தியில் பாப்புலராக உள்ளது. இன்ஸ்டாவை திறந்தாலே அடுத்தடுத்து விதவிதமான ரீல்ஸ் வீடியோக்கள் வருவதால், பொழுதுபோக்குக்கு சிறந்த செயலியாக அது இருக்கிறது. அந்த இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரைபர் ஆப்ஷன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்ட நடிகைகள் சிலர் அதில் தங்களுடைய கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு அதைப்பார்க்க காசும் வசூலிக்கிறார்கள். அதிலும் தற்போது சின்னத்திரை சீரியல் நடிகைகளும் அந்த கவர்ச்சி ரூட்டுக்கு தாவி ஆண்டுக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.

25
தர்ஷா குப்தா

இன்ஸ்டாவில் தற்போது டிரெண்டிங்கே இவர் தான். இவர் விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் சில சீரியல்களில் நடித்தாலும் அது பெரியளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. பின்னர் சினிமாவிலும் நடித்தார். அதிலும் சோபிக்க முடியவில்லை. இதனால் இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷனில் தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். பிகினி உடையில் அன்லிமிட்டெட் கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறாராம் தர்ஷா. அவருக்கு தற்போது 1428 சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆளுக்கு மாதம் 390 ரூபாய் வசூலிப்பதன் மூலமாக அவருக்கு மாதந்தோறும் ரூ.5 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதாம்.

35
அபிராமி வெங்கடாசலம்

இன்ஸ்டாவில் வசூல் வேட்டையாடும் மற்றுமொரு சீரியல் நடிகை தான் அபிராமி. இவர் சினிமாவில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் நடிக்க வந்தார். அதிலும் அடுத்தடுத்து வாய்ப்பு வராததால், கிளாமர் ரூட்டுக்கு திரும்பிய அவர், வித விதமாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தன்னுடைய சப்ஸ்கிரைபர்களுக்காக அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் 1846 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து மாதத்துக்கு ரூ.390 வசூலிக்கிறார் அபிராமி. அதன்மூலம் அவருக்கு மாதந்தோறும் 7 லட்சத்து 19 ஆயிரத்து 940 ரூபாய் கிடைக்கிறது.

45
ஜனனி அசோக்குமார்

இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் மூலம் டிரெண்டான சீரியல் நடிகை என்றால் அது ஜனனி அசோக் குமார் தான். இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொடர்களில் நடித்திருந்தாலும், அதில் ஹோம்லி லுக்கில் வந்திருப்பார். ஆனால் இன்ஸ்டாவில் ஆளே டோட்டலாக மாறி, விதவிதமான கிளாமர் உடைகளில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து, ரசிகர்களுக்கு கவர்ச்சிவிருந்து படைத்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் 2450 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மாதம் 390 ரூபாய் வீதம் கணக்கிட்டு பார்த்தால், ஜனனிக்கு மாதந்தோறும் இதன்மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறது. ஆண்டுக்கு கணக்கு போட்டால் கோடிகளை தாண்டிவிடுகிறது.

55
ரேஷ்மா பசுபுலேட்டி

இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகை என்றால் அது ரேஷ்மா பசுபுலேட்டி தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பேமஸ் ஆனார். அந்த சீரியல் முடிந்த பின்னர் கிளாமர் ரூட்டுக்கு திரும்பிய ரேஷ்மா, இன்ஸ்டா சப்ஸ்கிரைபர்களை கவர்ச்சியால் கிறங்கடித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2481 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். ஒரு மாதத்துக்கு 390 ரூபாய் நிர்ணயம் செய்திருக்கிறார். அதை கணக்கிட்டால், மாதந்தோறும் 9 லட்சத்து 67 ஆயிரத்து 590 ரூபாய் சம்பாதிக்கிறார் ரேஷ்மா.

Read more Photos on
click me!

Recommended Stories