Karthigai Deepam Serial Today 1151 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரியின் பாசத்தைப் பயன்படுத்தி சந்திரகலா இப்போது புதிய நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். அது என்ன என்று பார்க்கலாம்.
Karthigai Deepam Serial Chandrakala emotional drama
Karthigai Deepam Serial Today 1151 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் ஜாமீனில் வெளியில் வந்த சந்திரகலாவை நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம் என்று சிவனாண்டி கூற, இல்லை இல்லை நான் கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரியை பழி வாங்க வேண்டும். அதனால், நான் திரும்பவும் அந்த வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்று சந்திரகலா கூறிய நிலையில் அடுத்து என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.
ரசிகர்களுக்கு பிடித்த சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். இதில் ஒன் மேன் ஷோவாக கார்த்திக் ஒட்டு மொத்த சீரியலையும் தனது தோளில் சுமந்து கொண்டிருக்கிறார். அவருக்காகவே இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்று சொல்லும் அளவிற்கு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இதில் கோயில் நகைகளை திருடியது யார் என்று தனது மாமியார் சாமுண்டீஸ்வரியிடம் வீடியோ ஆதாரத்துடன் கார்த்திக் வெளிச்சம் போட்டு காட்டினார்.
அதில் சிக்கியது சந்திரகலா தான். அவருக்கு எதிராக கார்த்திக் திரட்டிய ஆதரங்களை வைத்து போலீசை வர வைத்து சந்திரகலாவை கைது செய்ய வைத்தார். இதைத் தொடர்ந்து சிவனாண்டி அவரை ஜாமீனில் எடுக்க, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கார்த்திக்கையும், அக்காவையும் சும்மா விட மாட்டேன் என்று சபதம் எடுத்தார். அக்கா பாசத்துக்கு கட்டுப்பட்டவள். அவளிடம் செண்டிமெண்டாக பேசி மீண்டும் நான் வீட்டிற்குள் சென்றுவிடுவேன்.
46
Karthigai Deepam Season 2 Latest Twist March 2026
உங்களுக்கு வர வேண்டிய பஞ்சாயத்து தலைவர் பதவி. அதை என்னுடைய அக்கா தேர்தலில் நின்று ஜெயித்து தலைவராகிவிட்டாள். இந்த முறை அவன் ஜெயித்துவிட்டான். இனிமேல், நான் சும்மா விடமாட்டேன் என்று கூறி தனது அக்கா வீட்டிற்கு சென்று நாடகத்தை அரங்கேற்றினார்.
அக்கா என்னை மன்னித்து விடு என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள். எல்லாவற்றையும் உனக்காகவும், இந்த குடும்பத்திற்காகவும் தான் செய்தேன்" என்று கூறி சாமுண்டீஸ்வரியின் மனதை மாற்ற முயற்சி செய்தார். நம் அம்மாவை கொலை செய்த இந்த குடும்பத்திலிருந்த் வந்த டிரைவரை பழி வாங்க தான் நான் அப்படி செய்தேன்.
56
Karthik Raj vs Chandrakala face off in Zee Tamil
டிரைவரை பழி வாங்க உதவி செய்வதாக அந்த சிவனாண்டி கூறியதன் காரணமாக அவருடன் கூட்டு சேர்ந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியாது, அதனால், அவர் சொல்வதைக் கேட்டு இந்த பிளானை பண்ணினேன் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். ரேவதி, ரோகிணி, மயில்வாகனம், ராஜ ராஜன் என்று எல்லோரும் பல முறை சந்திரகலாவின் திட்டம் பற்றி கூறினர்.
ஆனால், அதையெல்லாம் சாமுண்டீஸ்வரி கேட்கவில்லை. இந்த நிலையில் தான் சந்திரகலா தனது அக்காவை நம்ப வைக்க, அங்கிருந்த மண்ணெய்யை எடுத்து தனது உடல் முழுவது மூற்றி அக்காவிடம் வத்திப்பெட்டியை கொடுத்தார். அப்போதுதான் நான் உன் மீதுவைத்த பாசம் தெரியும். நீ என்னை நம்புவாய். இல்லையென்றால் நம்பமாட்டாய் என்று கூறி கண்ணீர்விட்டார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சாமுண்டீஸ்வரி கடைசியாக சந்திரகலாவை மன்னித்து ஏற்று கொண்டார்.
66
Karthigai Deepam Serial Tomorrow Episode Preview
மேலும், அவரை பஞ்சாயத்து முன் நிறுத்தி அவருக்கும் சிவனாண்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூற சொன்னார். அதற்கு எனக்கு நீ மட்டும் தான் முக்கியம். உனக்காக நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதை அடுத்த எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
சந்திரகலா தனது அடுத்த நாடகத்தை அரங்கேற்றியிருப்பது சாமுண்டீஸ்வரியைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது சந்திரகலாவின் அடுத்த கட்ட நகர்வை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.