எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் வீட்டில் இருக்கும் அறிவுக்கரசி, தன் தங்கச்சிக்கு நியாயம் கேட்டு பிரச்சனை செய்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு ரகசிய பூஜை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார் ஆதி குணசேகரன். இந்த பூஜையில் சக்தியும் ஜனனியும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று விசாலாட்சி ஒற்றைக்காலில் நிற்கிறார். அவர்கள் வராவிட்டாலும் இந்த பூஜை நடத்தியே ஆகவேண்டும் என கதிரும், ஞானமும் கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார்கள். ஜனனியை காலி பண்ண தான் இந்த பூஜையே நடத்தப்படுவதாக அறிவுக்கரசி கூறி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
பிரச்சனை பண்ணும் அறிவுக்கரசி
இருக்குற பிரச்சனை போதாதென்று அறிவுக்கரசி புது பிரச்சனை ஒன்றை கிளப்பிவிட்டுள்ளார். தன்னுடைய தங்கச்சியின் வாழ்க்கைக்கு நியாயம் கிடைக்காமல் தான் இங்கு இருந்து போகமாட்டேன் என சொல்கிறார். என்னோட தங்கச்சி தான் தர்ஷனுக்கு சட்டப்படி புருஷன் என கூறுகிறார். ஆனால் அதையெல்லாம் ஏற்க மறுக்கும் தர்ஷன், என்னோட பொண்டாட்டி பார்கவி தான் எனக்கூறி, அவரிடம் எகிறிக் கொண்டு சண்டைபோடுகிறார் அறிவுக்கரசி. இதையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த கதிர் மற்றும் ஞானம், அறிவுக்கரசியை திட்டி கீழே அனுப்பி விடுகிறார்கள்.
34
புலம்பும் ரேணுகா
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரேணுகா, இதுவும் ஆதி குணசேகரன் கிளப்பிவிட்ட பிரச்சனையாக தான் இருக்கும் என கூறுவதோடு, இன்னும் என்னென்ன பிரச்சனை பண்ண காத்திருக்கிறாரோ தெரியவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தும் விசாலாட்சி, அவங்க பண்றத பண்ணட்டும். நடக்குறத நம்ம பார்த்துக்குவோம் என கூறுகிறார். போகிற போக்கை பார்த்தால் ஜனனி வீட்டிற்கு வருவதற்கு முன் தர்ஷனையும், பார்கவியையும் எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என அறிவுக்கரசி திட்டம்போட்டு இருக்கிறார். அதற்கு ஆதி குணசேகரன் உதவுவாரா என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.
மறுபுறம் கொடைக்கானலில் ஜாலியாக இருக்கும் சக்தி மற்றும் ஜனனி, இரவில் தனியாக கேம்ப் ஃபயர் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். அப்போது சக்தியிடம் என்னமோ ரொமான்ஸெல்லாம் பிச்சு ஒதருவேன்னு சொன்ன, ஒன்னையும் காணோம் என ஜனனி சொல்ல, உடனே ரொமான்ஸ் செய்ய ஸ்டார்ட் பண்ணுகிறார் சக்தி. மாலை மங்கும் நேரம் பாடலை ரீ கிரியேட் செய்வது போல் இருவரும் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்கிறார்கள். இதையெல்லாம் தேவசகாயம் நோட்டம் விட்டு வருகிறார். அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.