கார்த்திக், அர்த்திகா நடித்த கார்த்திகை தீபம் சீரியலில் கையில் இருக்கும் மருதாணியால் தீபா கார்த்திக்கிடம் சிக்கினாரா, இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க கையில் இருக்கும் மருதாணியை பார்க்காமல் தவறவிட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
zee tamil Karthigai deepam serial
அதாவது மறுநாள் காலையில் தீப கார்த்திக்கிடம் என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்களா என்று கேட்க அவன் சம்மதம் தெரிவித்து கோவிலுக்கு அழைத்து வருகிறான். கோவிலுக்கு வந்த இவர்கள் கைரேகை பார்ப்பவரை பார்த்து கைரேகை கேட்கலாம் என்று அவரிடம் செல்ல முதலில் கார்த்திக் தனது கையை காட்டுகிறான்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
நீங்க ஒரு விஷயத்தை தேடிக்கிட்டு இருக்கீங்க கைக்கு எட்டினது கைநழுவி போயிடுச்சு என்று சொல்ல பல்லவி பற்றி சொல்றாங்களோ என நினைத்துக் கொள்கிறார். அதோடு கவலைப்படாதீங்க நீங்க நெனச்சது உங்கள நோக்கி வரும் எனவும் சொல்லி முடித்த பிறகு தீபா தன்னுடைய கையை காட்டுகிறாள்.
44
Karthigai deepam today episode
அப்போது கார்த்திக் தீபாவின் கையை பார்க்க அவளின் கையில் இருக்கும் மருதாணியை கவனித்து விடுகிறான். பல்லவி கையில் இருந்ததும் இதே மருதாணி தானே என்ற குழப்பம் கார்த்திக்கு எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.