இதற்கிடையே, கார்த்திக் ஏர்போர்ட்டை சென்றடைந்துவிட்டால் தங்களது திட்டம் தோல்வியடையும் என்பதை உணர்ந்த சந்திரகலா, சிவனாண்டி மற்றும் முத்துவேலுக்கு தகவல் தெரிவிக்கிறார். கார்த்திக்கின் பயணத்தை தாமதப்படுத்துவதற்காக பல்வேறு தடைகளை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால் எதிர்பார்த்தபடி கார்த்திக் சிக்கிக்கொள்ளாமல், தொடர்ந்து ஏர்போர்ட்டை நோக்கி முன்னேறுகிறார். இதனால் எதிரிகளின் பதற்றம் மேலும் அதிகரிக்கிறது.
மாயமான பாஸ்போர்ட்... ரேவதிக்கு ஷாக்!
ஒருபுறம் விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு வெளியாக, ரேவதி விமானத்தில் செல்ல தயாராகிறார். அந்த நேரத்தில் அவரது பாஸ்போர்ட் கையில் இல்லாதது தெரியவருகிறது. பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டதாக ரேவதி பதற்றத்துடன் கூற, சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். முக்கியமான நேரத்தில் பாஸ்போர்ட் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் தவிக்கின்றனர்.
அப்போது சந்திரகலாவுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ரேவதியின் பர்ஸை எடுத்துச் சென்றபோது பாஸ்போர்ட் கீழே விழுந்திருக்கலாம் என்பதை அவர் நினைவுபடுத்திக் கொள்கிறார். இதையடுத்து பாஸ்போர்ட்டை தேடி எடுத்துவருவதாக கூறிவிட்டு அவசரமாக காரை நோக்கி செல்கிறார்.
Karthigai Deepam : ரேவதியின் கனடா பயணத்திற்கு பின்னால் அதிர்ச்சி சதி... காப்பாற்ற ஓடும் கார்த்திக்!