எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கைதுக்கு பயந்து தலைமறைவாகி இருக்கும் ஆதி குணசேகரன், யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி அனைத்து உண்மைகளையும் சொன்னதை அடுத்து ஆதி குணசேகரனையும், அவரது தம்பிகளையும் குண்டாஸில் கைது செய்வதற்காக போலீஸ் துரத்தி வருகிறது. ஆனால் அவர்கள் போலீசுக்கே டிமிக்கு கொடுத்துவிட்டு புதுச்சேரியில் தலைமறைவாகி உள்ளனர். அங்கிருந்தபடி அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன செய்யலாம் என்று வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் ஆதி குணசேகரன். அவருக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிவுக்கரசி தொடர்ந்து அப்டேட் செய்த வண்ணம் இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
பிசினஸில் பிசியான ஜனனி
ஆதி குணசேகரன் கைதுக்கு பயந்து தலைமறைவாக இருக்க, மறுபுறம் ஜனனியும் வீட்டில் உள்ள பெண்களும் சேர்ந்து தாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஃபுட் டிரக் பிசினஸை தொடங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். அதன் முதல்படியாக, பழைய ஃபுட் டிரக் ஒன்றை வாங்கி அதை வீட்டுக்கு கொண்டுவந்துள்ளார் ஜனனி. அந்த வண்டி மிகவும் பழசாக இருந்ததால், அதை சுத்தம் செய்து, தங்களுக்கு ஏற்றபடி வர்ணம் பூசி புத்தம் புது வண்டியாக மாற்றி உள்ளனர். வீட்டில் ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோருடன் விசாலாட்சியும் சேர்ந்து செய்யும் கூத்துக்களை எல்லாம் ஆதி குணசேகரனுக்கு அப்டேட் செய்வதை பொழப்பாக பார்த்து வருகிறார் அறிவுக்கரசி.
34
கொளுத்திப் போட்ட கரிகாலன்
ஆதி குணசேகரனின் எடுபுடியான கரிகாலன், நேற்றையை எபிசோடிலேயே கதிர் மற்றும் ஞானத்தை சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார். இத்தனை நாட்களாக அனைத்து முடிவுகளையும் உங்க அண்ணன் தான் எடுத்தாரு, இந்த வாட்டி நீங்க ஒரு முடிவை எடுங்க என சவால்விட்டிருக்கிறார். இதனால் அடுத்ததாக ஜனனியை என்ன செய்யலாம் என்கிற தனது ஐடியாவை குணசேகரனிடம் சொல்கிறார் கதிர். அநேகமாக ஜனனியை வீட்டை விட்டு துரத்துவதற்கு தான் அவர் பிளான் போட்டிருக்கக்கூடும். ஏனெனில் ஜனனியை துரத்திவிட்டால் மற்ற பெண்களை ஈஸியாக நம் வழிக்கு கொண்டுவந்துவிடலாம் என்கிற மிதப்பில் இருக்கிறார் கதிர்.
ஆதி குணசேகரனுக்கு ஜனனி மீது இருந்த கோபம் தற்போது படிப்படியாக விசாலாட்சி பக்கம் திரும்பி இருக்கிறது. அவர் தனக்கு எதிராக போலீஸில் வாக்குமூலம் கொடுத்ததால் செம கோபத்தில் இருக்கும் ஆதி குணசேகரன், அடுத்த பிளானாக விசாலாட்சியை போட்டுத்தள்ள முடிவெடுக்கக் கூடும். தனக்கு எதிராக செயல்பட்ட யாருமே இருக்கக்கூடாது என்று சபதம் எடுத்து பாண்டிச்சேரிக்கு சென்றிருக்கிறார். இதனால் அறிவுக்கரசியை வைத்து விசாலாட்சியின் கதையை முடிக்க ஆதி குணசேகரன் பிளான் போட வாய்ப்பு உள்ளது. இதனால் மற்றுமொரு சம்பவம் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி. அது என்ன என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.