எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் அனைவரையும் இராமேஸ்வரம் அழைத்துச் செல்வதில் மும்முரமாக இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தேவசகாயத்திடம் இருந்து தப்பித்த ஜனனிக்கு, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார். ஏனெனில் அவர் தேவசகாயத்தை போலீசிடம் சிக்க மீண்டும் அந்த வீட்டுக்கு போனபோது அங்கு எல்லாமே தலைகீழாக மாறி இருந்தது. அங்கு தேவசகாயம் இருந்ததற்கான தடயம் கூட இல்லாத அளவுக்கு எல்லாவற்றையும் மாற்றி வைத்திருந்தார்கள். இதனால் தேவசகாயத்தை எப்படி கண்டுபிடிப்பது, நம்முடைய இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் யார் என்கிற விஷயம் தெரியாமல் கன்பியூஸ் ஆகி இருக்கிறார் ஜனனி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
போலீசில் புகார் அளிக்கும் ஜனனி
குழப்பத்தில் இருக்கும் ஜனனியை ஆசுவாசப்படுத்தும் மதிவதினி, இதற்கு பின்னால் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. நாளைக்கு நாம் வீட்டுக்கு செல்லும் முன் போலீஸிடம் இதுதொடர்பாக புகார் அளித்துவிட்டு செல்லலாம் என கூறுகிறார். ஜனனியும் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றிருக்கிறார். இதையடுத்து அவர் மாஸாக வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஜனனியின் வரவுக்கு பின்னர் ஆட்டம் மீண்டும் சூடுபிடிக்கப் போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
35
ஆதிகுணசேகரனின் இராமேஸ்வரம் பிளான்
மறுபுறம் வீட்டில், இராமேஸ்வரம் சென்று தன்னுடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வேலைகளை மும்முரமாக செய்து வருகிறார் ஆதி குணசேகரன். அவர் அங்கு செல்வதற்கு முனைப்பு காட்டுவதால், அதன் பின்னணியில் ஒரு மர்மம் இருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய சில பொருட்கள் வாங்க வேண்டும் என நந்தினி சொல்ல, அவரிடம் லிஸ்டை கேட்டு வாங்கும் ஆதி குணசேகரன், நானே போய் வாங்கி வருகிறேன் என கூறுகிறார். என்னது நீங்களா என நந்தினி ஷாக் ஆக, இந்த வீட்டுக்காக எவ்வளவோ உழைச்சிருக்கேன். இதைக்கூட செய்ய மாட்டேனா என கூறுகிறார் குணசேகரன்.
அப்போது வெளியே அமர்ந்திருந்த ஐயர் ஒருவர், உங்களுக்கு 13 வயசு இருக்கும் போதே உங்க அப்பா இறந்துபோயிட்டாரு. அதுக்கப்புறம் நீங்க கஷ்டப்பட்டு இந்த குடும்பத்தை முன்னேத்தி கொண்டுவந்திருக்கீங்க என பில்டப் விடுகிறார். அப்போது ஆதி குணசேகரன் வெளியே செல்வதற்கு கிளம்ப, அறிவுக்கரசி நானும் வர்றேன் என கூறுகிறார். அதெல்லாம் வேண்டாம் நானே போயிட்டு வர்றேன் என குணசேகரன் சொல்ல, பின்னர் கதிரும், ஞானமும் அந்த லிஸ்ட்டை வாங்கிவிட்டு, நாங்க போயிட்டு வர்றோம் என கிளம்புகிறார்கள்.
55
கரிகாலன் சொன்ன குட் நியூஸ்
அந்த நேரத்தில் கரிகாலனிடம் இருந்து போன் கால் வருகிறது. அப்போது ஆதி குணசேகரனிடம், மாமா எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. உங்க அப்பா ஆதி முத்துவின் போட்டோவை எடுத்தாச்சு என சொல்கிறார். சரி அனுப்பி வை என சொல்ல, நான் நேரில் வந்துதான் காட்டுவேன் என சொல்லும் கரிகாலன் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வருகிறேன் என கூறிவிட்டு போனை கட் பண்ணிவிடுகிறார். கரிகாலன் ரெடி பண்ணி கொண்டுவந்துள்ள போட்டோவில் இருக்கும் ஆதி முத்துவின் முகத்தை பார்க்க அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.