எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன், தப்பிக்க முயன்றபோது அவனை மடக்கிப் பிடித்த ஆதி குணசேகரன், அவனை அடிவெளுத்து மீண்டும் மண்டபத்துக்குள் அழைத்து சென்றிருக்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனை ஆதி குணசேகரன் கேங்கிடம் இருந்து நைஸாக முல்லை அழைத்து வந்த நிலையில், அவனை மேக்கப் போட அழைத்து செல்வதாக கூறிவிட்டு, பின்புறம் வாயிலாக நந்தினி, சக்தி ஆகியோர் தர்ஷனை அழைத்து சென்ற நிலையில், மண்டபம் வாசலில் காரின் முன் அதிர்ச்சி உடன் காத்திருக்கிறார் ரேணுகா. பின்னர் இவர்கள் மூவரும் ரேணுகா அருகில் சென்றபோது தான் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது. தர்ஷன் கடத்தப்பட்டது தெரிந்து குணசேகரன் தன்னுடைய ஆட்களுடன் வாசலில் கெத்தாக நிற்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
தர்ஷனை அடிவெளுத்த ஆதி குணசேகரன்
பின்னர் அவர்கள் அருகில் வரும் குணசேகரன், தர்ஷனை உள்ளே வரச் சொல்கிறார். தர்ஷன் முடியாது என சொன்னதும் அவனை அடிவெளுக்கிறார். நந்தினி, சக்தி ஆகியோராலும் அதை தடுக்க முடியவில்லை. பின்னர் தர்ஷனை இழுத்து தங்கள் பிடியில் வைத்துக் கொள்ளும் ஆதி குணசேகரன், சக்தியை பார்த்து, நீ ஒரு ஆம்பளையா இருந்தேனா, இந்த கல்யாணத்தை தடுத்து பாருடா என சவால் விடுகிறார். பிளான் சொதப்பியதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி நிற்கும் சக்தி, ரேணுகா மற்றும் நந்தினி, உடனே ஜனனிக்கு போன் போட்டு பேசுகிறார்கள். அவரும் பதற்றத்துடன் போனை எடுக்கிறார்.
34
ஜனனிக்கு தெரியவரும் சம்பவம்
தங்களுக்கு ஒன்னும் நடக்கவில்லை என்று கூறும் ஜனனி, ரெளடிகளிடம் இருந்து தப்பித்து தாங்கள் வந்துகொண்டிருப்பதாக சொல்கிறார். இங்கு பெரிய பிரச்சனை ஆனதாக சொல்லும் சக்தி, தர்ஷனை கூட்டிட்டு வரும்போது எல்லாரும் பார்த்துவிட்டார்கள். அவனை அடித்து மீண்டும் மண்டபத்திற்குள் அழைத்து சென்றுவிட்ட விஷயத்தையும் கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் ஜனனி, தாங்கள் சீக்கிரம் வந்துவிடுவதாக கூறுகிறார். ஜனனி, ஜீவானந்தம் ஆகியோர் காரில் வந்துகொண்டிருக்கும் போது ஒரு லாரி அவர்களை பின் தொடர்ந்து வருகிறது. இதை ஜனனியும் நோட் பண்ணிவிடுகிறார்.
தங்களை கொல்ல ஆதி குணசேகரன் அனுப்பிய லாரியாக தான் இருக்கும் என சந்தேகப்படும் ஜனனி, அதில் இருந்து தப்பிக்க வேகமாக செல்கிறார். இதையடுத்து என்ன ஆனது? தர்ஷனுக்கு அன்புக்கரசியுடன் திருமணம் நடந்ததா? சக்தியும், நந்தினியும் தர்ஷனின் திருமணத்தை தடுத்தார்களா? ஜனனி கல்யாண நேரத்திற்குள் மண்டபத்திற்கு வந்தாரா? அறிவுக்கரசி கேமராமேனை கொன்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததா? ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ ஆதாரம் வெளிவருமா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.