Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போனது தொடர்பாக ஈஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி வீட்டுக்கு கிளம்பிய தர்ஷினி பாதி வழியில் கடத்தப்பட்டு இருக்கிறார். தர்ஷினியை கடத்தியது யார் என்பது தெரியாமல் ஜனனி பதறிப் போய் இருக்க, மறுபுறம் ஈஸ்வரியிடம் ஜனனி தங்கள் வீட்டில் தான் தர்ஷினி இருப்பதாக பொய் சொல்லிவிட்டு, பின்னர் காலையில் ஈஸ்வரி வீட்டுக்கு சென்று தர்ஷினி காணாமல் போன விஷயத்தை சொல்லி விடுகிறார். இதனால் பதறிப் போகும் ஈஸ்வரி என் மகளை நீங்கள் தான் என்னமோ பண்ணி இருக்கீங்க தயவு செஞ்சு அவளை இங்கே கொண்டு வந்து விட்டிருந்த என கெஞ்சுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இதை அடுத்து ஜனனி மதிவதினியை அரசு கிரானைட் ஃபேக்டரியல் சந்தித்து பேசுகிறார். அப்போது ஆதி குணசேகரன் தர்ஷினியை கடத்தி இருப்பாரா என்கிற கோணத்தில் மதிவதினி கேட்க அதற்கு வாய்ப்பே இல்லை என சொல்கிறார் சக்தி. அப்போ வேற யார் அவளை கடத்தி இருப்பார்கள் என இவர்கள் நால்வரும் டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து போலீஸ் உடன் அங்கு வருகிறார் கதிர். அப்போது ஜனனியை விசாரிக்க வந்திருப்பதாக போலீஸ் சொல்ல, அவரை தடுத்து நிறுத்தும் மதிவதினி, தயவு செஞ்சு ஒருத்தரை மட்டும் கார்னர் செய்யும் விதமாக விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறார். அதற்கு அந்த போலீசும் ஓகே சொல்கிறார்.
35
ஈஸ்வரியிடம் விசாரணை
பின்னர் ஜனனியை கூட்டிக்கொண்டு ஆதி குணசேகரனின் வீட்டுக்கு செல்கிறது போலீஸ். அப்போது அங்கு வாசலில் காத்திருக்கும் ஈஸ்வரி, தர்ஷினி பற்றி ஏதாவது தெரிந்ததா என கேட்க இல்லை என சொல்கிறார் கதிர். பின்னர் ஈஸ்வரியிடம் விசாரணையை தொடங்குகிறார் போலீஸ் அதிகாரி. அவரிடம் உங்களுக்கு யார் மீது சந்தேகம் இருக்கிறது என கேட்க, அவரோ ஜனனியை கை காட்டுகிறார். இவதான் என் மகளை எங்கேயோ மறைத்து வைத்திருக்கா எப்படியாவது மீட்டுக் கொடுங்க என சொல்கிறார் ஈஸ்வரி. இதனால் போலீசுக்கு ஜனனி மீது மேலும் சந்தேகம் அதிகரிக்கிறது. பின்னர் ரேணுகா நந்தினி ஆகியோரிடமும் விசாரணை நடத்துகிறார்கள்.
அந்த நேரம் பார்த்து கதிருக்கு புது நம்பரில் இருந்து ஒரு போன் கால் வருகிறது. தர்ஷினி விஷயமாக தான் இருக்குமோ என பயந்து அந்த போனை எடுக்க தயங்குகிறார் கதிர். பின்னர் ஜனனியை ரூமுக்குள் தனியாக அழைத்து சென்று பேசுகிறார் சக்தி. தர்ஷினி பத்திரமாக இருக்கிறாளா, அவளை எப்படி கண்டுபிடிக்க போகிறோம் என்பதுதான் என்னுடைய மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது என கூறுகிறார் ஜனனி. சத்தியமா அதுக்கு ஒரு லீடு கிடைக்கும் நீ அதையெல்லாம் நினைத்து மனசை குழப்பிக்காத என சொல்லி அவரை ஆஸ்வாசப்படுத்துகிறார் சக்தி.
55
கைதாகிறாரா ஜனனி?
போகிற போக்கை பார்த்தால் ஜனனியை போலீஸ் கைது செய்ய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் ஈஸ்வரி ஜனனிதான் தன் மகளை கடத்தி இருப்பாள் என ஆணித்தனமாக சொல்வதால் அதை ஆதாரமாக எடுத்துக் கொண்டு ஜனனியை போலீஸ் கைது செய்து விசாரிக்க வாய்ப்பு உள்ளது. ஜனனி கைது செய்யப்பட்டால் அவரால் ஆதி குணசேகரனுக்கு எதிரான வழக்கில் ஆஜராக முடியாமல் போகக் கூட வாய்ப்புள்ளது. அது அவருக்கு பெரும் பின்னாடி வாங்க அமையும். இந்தத் தடங்கல்களை எல்லாம் ஜனனி எப்படி எதிர்கொள்ளப் போகிறார். தர்ஷினியை கண்டுபிடிப்பாரா இல்லையா என்கிற கேள்விகளுக்கு இனி தான் விடை கிடைக்கும்.