Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!

Published : May 16, 2026, 11:26 AM IST

Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடர்ந்த வழக்கில் ஆஜராக ஈஸ்வரி கோர்ட்டுக்கு வந்துள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, பந்தக்கால் நடுவதற்காக வீட்டிற்கு வந்திருந்த நிலையில், அவரிடம் இந்த கேஸை வாபஸ் வாங்கிவிட்டு குடும்பத்தோடு இணக்கமாக செல்லுமாறு ஈஸ்வரி கேட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த ஜனனி, நாளைக்கு என்ன ஆனாலும் நான் நீதிமன்றத்துக்கு செல்வேன் என சவால்விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறார் ஈஸ்வரி. அவரிடம் கதிர் மற்றும் ஞானம் இருவரும் வந்து பேசி, நீதிமன்றத்தில் அண்ணனுக்கு ஆதரவாக பேசுமாறு கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal : ஓட்டலில் ஒரே ரூமில் தர்ஷன் - அன்புக்கரசி... வீடியோவால் வெடிக்கப்போகும் புது பிரச்சனை

25
கோர்ட்டுக்கு கிளம்பு ஜனனி - சாருபாலா

மறுநாள் வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், ஜனனி தன்னுடைய வக்கீல் சாருபாலா உடன் காரில் கிளம்பி கோர்ட்டுக்கு செல்கிறார். சக்தியும் உடன் இருக்கிறார். அப்போது கோர்ட்டில் எல்லாவற்றையும் சரியாக சொல்லுங்கள் என சாருபாலா சொன்னதும், எனக்கும் ஈஸ்வரி அக்காவுக்கும் இடையேயான உறவு முறிந்தாலும் சரி, நான் நியாயத்தின் பக்கம் தான் நிற்பேன் என்று திட்டவட்டமாக கூறுகிறார். மறுபுறம் ஈஸ்வரியை, கதிர் மற்றும் ஞானம் இருவரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வருகிறார்கள். ஆதி குணசேகரன் கோர்ட்டுக்கு வரவில்லை.

35
ஈஸ்வரி குணசேகரன் ஆளா மாறிட்டாங்க

கோர்ட் வாசலில் ஜனனி, சாருபாலா உடன் நின்று கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் ஈஸ்வரி, அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் நீதிமன்றத்திற்குள் செல்கிறார். அப்போது ஜனனியிடம் பேசும் சாருபாலா, ஈஸ்வரி இப்படி நடந்துக்குறாங்கனு நீங்க விட்டுக் கொடுத்து போயிடாதீங்க. அவங்க தப்பானவர்கள் பக்கம் நின்றாலும் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்காங்க பாத்தீங்கள்ல. நீங்க நடந்தவற்றை முழுவதுமாக சொல்லியும் அவர்களால் அதை உள்வாங்க முடியவில்லை. ஏனெனில் அவர் தன்னையும் மீறி குணசேகரனின் ஆளாக மாறிவிட்டார் என கூறுகிறார் சாருபாலா.

45
சாருபாலா வாதம்

இதையடுத்து வழக்கு விசாரணைக்காக ஜனனி நீதிமன்றத்திற்குள் செல்கிறார். அப்போது சாருபாலாவை அழைக்கும் நீதிபதி, நீங்க மறு விசாரணை கேட்டு பெட்டிஷன் சமர்பித்திருப்பது ஏன் என கேட்கிறார். அதற்உ அவர், இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட தன்மை நேர்மையாக இருந்தாலும் காலம் நீட்டிக்கப்பட்டதால், சில விஷயங்கள் ரொம்ப நார்மலாகிவிட்டது. குணசேகரன் செஞ்சது மிகப்பெரிய குற்றம். ஆனால் அதற்கான தண்டனை அவருக்கு கிடைக்கவில்லை. அவருக்கு அந்த வழக்கில் ஜாமீன் கொடுத்து தீர்ப்பளித்துவிட்டார்கள்.

55
நீதிபதி கேட்ட கேள்வி

ஆனால் ஜாமீன் கொடுத்ததுக்கு அப்புறம், குணசேகரன் வெளிய வந்து நிறைய தப்பு பண்ணிருக்காரு. அதெல்லாம் இந்த வழக்கில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். இது எல்லாத்துக்கும் சேர்த்து தான் நாங்க மறு விசாரணைக்கு முறையிட்டு இருக்கிறோம் என சொல்கிறார் சாருபாலா. அதன்பின்னர் குணசேகரன் தரப்பு வக்கீல் எழுந்து, அவர்கள் தொடர்ந்துள்ளது பொய் வழக்கு என கூறுகிறார். அப்போது குறுக்கிடும் நீதிபதி, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி குணசேகரன், அவரை எங்கே என நீதிபதி கேட்க. வாயடைத்துப் போகிறார் வக்கீல். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அதன் பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories