கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி... அடேங்கப்பா எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்குள் இம்புட்டு திறமையா?

Published : Sep 12, 2025, 01:30 PM IST

Ethirneechal Thodargiradhu Actress Guinness record : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Monisha Guinness Record

சீரியல் என்றாலே இளைஞர்கள் வெறுக்கும் காலம் போய், தற்போது இளசுகள் கூட விரும்பி பார்க்கும் வகையில் ஒவ்வொரு சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது. சினிமாவுக்கு நிகராக விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான். இந்த சீரியல் ஆண்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தான் தற்போது டிஆர்பி-யிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

24
சக்கைபோடு போடும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் வெற்றிக்கு அதன் அதகளமான கதைக்களம் மட்டுமின்றி, அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் தான் காரணம். அந்த வகையில் இதில் இடம்பெறும் ஆதி குணசேகரன், ஜனனி, தர்ஷன், தர்ஷினி, ரேணுகா, நந்தினி, கதிர், கரிகாலன், ஜீவானந்தம் என அனைத்து கதாபாத்திரங்களும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் தங்கள் முழு உழைப்பை போட்டு நடித்து வருவதால், மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக எதிர்நீச்சல் தொடர்கிறது மாறி இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகையின் திறமையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

34
கின்னஸ் சாதனை படைத்த மோனிஷா

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் - ஈஸ்வரி ஜோடியின் மகளாக தர்ஷினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் மோனிஷா விஜய். இவர் கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நடிகர் கோகுல் நடத்தி வரும் யூனிக் டேலண்ட் அகாடமி என்கிற பயிற்சி மையத்தில் பயின்று, கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் நடிகை மோனிஷா. இவர் மட்டுமின்றி இவருடைய சகோதரியும் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறாராம். இந்தியாவிலேயே கின்னஸ் உலக சாதனை படைத்த முதல் இரட்டை சகோதரிகள் என்கிற பெருமையை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

44
மோனிஷா செய்த சாதனை என்ன?

அப்படி இவர் செய்த கின்னஸ் சாதனை என்ன தெரியுமா? poi weaves எனப்படும் பந்தை கயிற்றில் கட்டி சுத்தும் போட்டியில் ஒரு நிமிடத்தில் 80 முறை அதைச்சுற்றி நடிகை மோனிஷாவும் அவரது தங்கையும் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். இதுதவிர முறைப்படி சிலம்பமும் பயின்றிருக்கும் மோனிஷா, சர்வதேச அளவிலான போட்டிகளில்ல் பங்கேற்று தங்க பதக்கங்களையும் வென்று குவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஜிம்னாஸ்டிக், ஹார்ஸ் ரைடிங், ஸ்கேட்டிங், மார்ஷியல் ஆர்ட்ஸ், ஸ்விம்மிங் என பல திறமைகளை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறார் மோனிஷா. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த பொண்ணுக்குள்ள இம்புட்டு திறமையா என வாயடைத்துப் போய் உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories