டிஆர்பி ரேஸில் டாப் 5-க்குள் இருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், நேர மாற்றத்துக்கு பின்னர் கடும் சரிவை சந்தித்து தற்போது கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
சின்னத்திரையில் சக்கைப்போடு போடும் சீரியல்களையும், படுமோசமான சீரியல்களையும் கண்டறிய உதவு தான் டிஆர்பி ரேட்டிங். இந்த டிஆர்பி ரேஸை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே தான் கடும் போட்டியே நிலவி வருகிறது. அவ்வப்போது ஜீ தமிழ் சீரியல் ஏதாவது டாப் 10க்குள் வரும். இந்த நிலையில், 2026-ம் ஆண்டின் 9வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் என்னென்ன சீரியல்கள் இடம்பிடித்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
25
எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி என்ன?
கடந்த வாரம் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் 10வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் சின்ன மருமகள் சீரியல் 10ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரத்தில் 9-ம் இடத்தில் இருந்த சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 5.54 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 9-வது இடத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் உள்ளது. கடந்த வாரம் 6.00 புள்ளிகளை பெற்றிருந்த எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் டிஆர்பியில் சற்று ஏற்றம் கண்டு 6.13 புள்ளிகளை பெற்றிருந்தாலும், ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 9-ம் இடத்தை பிடித்துள்ளது.
35
பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கடந்த வாரம் 7-ம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளதால் 8-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்த சீரியலுக்கு 6.70 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் மளமளவென சரிந்து 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 6.92 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 7.03 புள்ளிகளை பெற்று 7-ம் இடத்தில் உள்ளது.
சன் டிவியின் அன்னம் சீரியல், கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் 6-வது இடத்திலேயே நீடிக்கிறாது. அதற்கு 7.06 டிஆர்பி கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் மருமகள் சீரியல் உள்ளது. கடந்த வாரம் வரை கயல் சீரியல் உடன் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், இந்த வாரம் சோலோவாக ஒளிபரப்பாகி 7.58 புள்ளிகள் உடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 7.66 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
55
சரிவை சந்தித்த அய்யனார் துணை
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடரான அய்யனார் துணை, கடந்த சில வாரங்களாக இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதற்கு 7.79 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பெண்ணே சீரியல் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 4ம் இடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல், இந்த வாரம் விறுவிறுவென முன்னேறி 7.94 புள்ளிகள் உடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. வழக்கம் போல் மூன்று முடிச்சு சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது. ஸ்வாதி கொண்டே நாயகியாக நடித்த இந்த சீரியலுக்கு 9.45 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.