எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்கிய ஃபுட் டிரக் பிசினஸை இழுத்து மூட வைக்க அவருக்கு எதிராக தன்னுடைய ஆளை அனுப்பி கடை போட்டுள்ளார் ஆதி குணசேகரன். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ஃபுட் டிரக் பிசினஸ் தொடங்க விடாமல் இருக்க பல்வேறு வழிகளில் முயற்சித்து பார்த்தார் ஆதி குணசேகரன். ஆனால் ஜனனி, கலெக்டர் மதிவதினி சப்போர்ட்டோடு கடையை வெற்றிகரமாக தொடங்கி, பிசினஸை நடத்தி வருகிறார். இதனிடையே கதிர் அனுப்பிய ஆள், ஜனனியை நேரில் சந்தித்து, அவர்கள் என்னை வைத்து உங்கள் கடை மீது பாம் வீசி தகர்க்க சொன்ன விஷயத்தை போட்டுடைக்கிறார். அந்த நபரின் போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டார் ஜனனி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
குமாரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் குணசேகரன்
ஆதி குணசேகரன், மதுரையில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவருக்கு குமார் என்பவர் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். அவர் வீட்டில் இருந்தபடியே அடுத்தக்கட்ட நகர்வு குறித்து பிளான் போட்டு வருகிறார் ஆதி குணசேகரன். அப்போது குடிபோதையில் அங்கு வரும் கரிகாலன், வீட்டில் உள்ள அறிவுக்கரசி எந்தவித அப்டேட்டும் கொடுக்காததால், நான் நேரில் சென்று பார்த்துவிட்டு வரட்டுமா என ஆதி குணசேகரனிடம் கேட்கிறார். அதற்கு அவர் நீ எதுவும் பண்ண வேண்டாம் பேசாம இரு, எல்லாத்தையும் குமார் பார்த்துப்பான் என சொல்கிறார். மறுபுறம் குமார் ஒரு கூமுட்டைத்தனமான ஐடியாவை போட்டிருக்கிறார்.
34
ஜனனிக்கு எதிரே கடைபோட்ட பிரியாணி கடைக்காரர்
ஜனனியின் ஃபுட் டிரக் பிசினஸுக்கு ஜாம் ஜாம்னு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அவர்கள் ஃபுட் டிரக் நிற்கும் இடத்திற்கு எதிரில் ஒரு தள்ளுவண்டியை ஒருவர் வந்து நிறுத்துகிறார். அதில் பிரியாணியை கொண்டு வந்திருக்கும் அந்த நபர், பிரியாணிக்கடை போட இருப்பதாக சொல்கிறார். அவரிடம் சண்டைக்கு செல்கிறார் சக்தி. இந்த இடத்தைவிட்டு ஒழுங்கா போயிடு என மிரட்டுகிறார் சக்தி. ஆனால் அதற்கெல்லாம் அசராத அந்த பிரியாணிக் கடைக்காரர், இங்கு கடை போடுவேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார். பின்னர் சக்தியை தடுத்து நிறுத்தும் ஜனனி, அவர் யார் சொல்லி இங்க வந்திருப்பாருனு எனக்கு தெரியும், விடுங்க, பார்த்துக்கலாம் என கூறுகிறார்.
அந்த பிரியாணி கடைக்காரர் அங்கு வருபவர்களை மடக்கி பிரியாணி சாப்பிட அழைத்தாலும் அனைவரும் ஜனனியின் ஃபுட் டிரக்கிற்கு தான் செல்கிறார்கள். ஜனனியின் கடையில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அந்த பிரியாணி கடைக்காரர் யாரும் வராததால் ஈ ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் விரக்தி அடைந்த அந்த பிரியாணி கடைக்காரர், அங்கு உள்ள பிரியாணி டபராவை தட்டி வருபவர்களை அழைக்கிறார். அதற்கும் யாரும் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து ஜனனியின் ஃபுட் டிரக் அருகே வந்து அங்கிருக்கும் சாப்பாடுகளை பார்க்கிறார். இதையடுத்து என்ன ஆனது? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.