
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் தங்கமயில் குடும்பத்தினர் கோர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். கோர்ட்டில் எப்படியெல்லாம் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று தங்கமயிலுக்கு அவரது அம்மா பாக்கியம் சொல்லி கொடுத்தார். நாங்கள் சொன்னது போன்றே சொல்ல வேண்டும். மாற்றி பேசினால் தங்களை ஜெயிலில் போட்டுவிடுவார்கள் என்று கூறி பிளாக்மெயில் செய்தார். என்ன நடந்தது என்று முழுவதுமாக பார்க்கலாம்.
வரதட்சணை கேட்டு புகார் கொடுத்ததால் பாண்டியன் குடும்பத்தினர் இப்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதில் அரசி மற்றும் ராஜீ மட்டுமே விடுவிக்கப்பட்ட நிலையில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர் ஆகியோர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதில் கோமதிக்கு ஏற்கனவே உடல்நல பிரச்சனை இருந்து வந்த நிலையில் ஜெயிலில் பிபி மற்றும் சுகர் ஆகியவற்றின் காரணமாக மயங்கி விழுந்தார்.
அதன் பிறகு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு அவருக்கு சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து சுய நினைவிற்கு வந்த நிலையில் அவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து கோர்ட்டுக்கு அழைத்து செல்ல போலீசார் தயாரானார்கள். கடைசியாக, இதெல்லாம் தெரியாத தங்கமயில் குடும்பத்தினர் கோர்ட்டுக்கு செல்வது பற்றியும் என்ன பேசுவது பற்றியும், கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ என்பது பற்றியும் பேசி கொண்டிருந்தனர்.
முதலில் மாணிக்கம் மற்றும் பாக்கியம் இருவரும் பேசிக் கொண்டனர். அதில், நாம் அவசரப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டோமோ என்று தோன்றுகிறது. நம் மீது போலீசில் புகார் கொடுத்தால் நாம் அவர்களிடம் பேசுவோமா? இல்லை அவர்கள் வீட்டிற்கு தான் போவோமா? அதனால் நாம் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மீனா வந்த போதே அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் கொடுக்கும் வகையில் அதெப்படி முடியும்? மீனா வந்த போன உடனேயே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டார்கள். வீட்டை விட்டு துரத்திய பிறகு கூட அவர்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தாள். ஆனால், அவளை வெளியில் துரத்திவிட்டார்கள். அத்தனை பேருக்கும் சோறு ஆக்கிப் போட்டு பத்திரமாக பார்த்துக் கொண்டாள். ஆனால், அவர்கள் கொஞ்சம் கூட அதைப் பற்றி நினைக்கவில்லை. உடனே வந்து கூட்டிக் கொண்டு போங்க என்று தான் சொன்னார்கள். அவர்களை சும்மா விடக் கூடாது. அவர்களை மிரட்டத்தான் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறோம். அவர்கள் தானாகவே வந்து மயிலை கூட்டிக் கொண்டு போவாங்க என்றார்.
அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தங்கமயில் வந்தார். அம்மா, நாம் ரொம்ப தப்பு செய்துவிட்டோம். முதலிலேயே அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும், அவர்களுக்கு என்னுடைய படிப்பு, வயசு எல்லாம் ஒரு மேட்டரே இல்லை. இதுக்கு அப்புறம் நான் அந்த வீட்டில் வாழ முடியுமா? என்னை அவர்கள் சேர்த்து கொள்வார்களா என்று கேட்டார். அப்படியே பேசிக் கொண்டிருந்த நிலையில் நீ தூங்க மயில். நாளைக்கு கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறி அவரை தூங்க வைத்தார்.
இதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் வழக்கறிஞரும் மயில் வீட்டிற்கு வந்தார். அவரிடம் பொய் சொல்வது தப்பில்லையா? சொன்ன பொய்யால் தான் இந்த நிலைமையில் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் திரும்ப திரும்ப பொய் சொன்னால் எப்படி? என்று கேட்க, அதற்கு பாக்கியம், இது தான் கடைசி பொய், இனிமேல் பொய்யே சொல்லமாட்டோம் என்றார்.
கோர்ட்டில் எல்லோரது முன்னிலையிலும் என்னுடைய புகுந்த வீட்டை பற்றி தப்பா பேச வேண்டுமா? அவர்கள் என்னை வெறுக்கமாட்டார்களா என்று கேட்டார். அதற்கு பாக்கியம் நாம் என்னா 10 வருஷம், 20 வருஷம் தண்டனையா வாங்கி தரப்போகிறோம். அவர்களை பயமுறுத்தத்தான் இப்படியெல்லாம் செய்கிறோம் என்று சொல்லி முடிப்பதற்குள் வழக்கறிஞரும் அவர்கள் கோர்ட்டுக்கு வந்ததும் மிரண்டு போவாங்க என்றார். Compromiseக்கு வரும் போது டிமாண்ட் எவ்வளவு என்று சொல்லி செட்டில் பண்ணிக் கொள்வோம் என்று வழக்கறிஞர் சொல்ல, அய்யோ எனக்கு பெரிய டிமாண்ட் எல்லாம் கிடையாது.
அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் அவ்வளவு தான் என்றார். மேலும், அதன் பிறகு அவர்கள் என்னை நல்லா பார்த்துக் கொள்வார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார். கடைசியில் பாக்கியம் தனது மகளிடம் கோர்ட்டுக்கு வந்து சொதப்பிவிடாத, பிறகு எங்களை ஜெயிலில் போட்டுவிடுவாங்க. அவர்கள் நம்ம வழிக்கு வந்து விடுவார்கள். அவர்களை தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் விருப்பம் இல்லை. ஆரம்பத்திலேயே சொன்னேன், உன்னுடைய புருஷனை கைக்குள்ள போட்டு வச்சுக்கோ என்று, ஆனால், நீ தான் கேட்கவில்லை. இப்போது இந்த நிலைமையில் வந்து நிற்கிறோம் என்று கூறி அழுதார்.