மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோமதி; தூக்கம் வராமல் தவிக்கும் முத்துவேல் பிரதர்ஸ்; கலங்கும் பாண்டியன் குடும்பம்!

Published : Jan 05, 2026, 09:14 PM IST

Pandian Stores 2 Gomathi Hospitalized : ஜெயிலில் தனி அறையில் அடைக்கப்பட்ட கோமதி திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

PREV
19
Pandian Stores 2 Gomathi Hospital Scene

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் 681ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கடந்த வாரம் தனி ஜெயிலில் அடைக்கப்பட்ட கோமதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஜெயிலில் மயக்கம்போட்டு கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார். பிபி மற்றும் சுகர் ரொம்பவே லோவாக இருந்ததால் டிரிப்ஸ் போடப்பட்டது. இப்போது சரியாகிவிட்டார் என்று மருத்துவர் கூறினார். பின்னர் அவரை கோர்ட்டுக்கு அழைத்து செல்ல எஸ் ஐ அங்கு வந்தார்.

29
Pandian Stores 2 Serial Highlights

அவரிடம் தனது கணவரையும், மகன்களையும் அடிக்க மாட்டாங்க தான என்று கேட்டார். மேலும் தனக்கு சாப்பாடு எதுவும் வேண்டாம். நாம் கோர்ட்டுக்கு போகலாம். அவர்களை பார்க்காமல் எனக்கு பச்ச தண்ணீர் கூட இறங்காது. நாங்கள் எந்த தப்பும் செய்யவில்லை என்று பரிதாபமாக குறிப்பிட்டார். இது ஒருபுறம் இருக்க, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஜெயிலில் இருப்பதை எண்ணி மனம் வருந்திக் கொண்டிருக்கும் அரசி, ராஜீ மற்றும் மீனாவிற்கு பழனிவேல் சாப்பாடு கொண்டு வந்து அவர்களை சாப்பிட வைத்தார்.

39
Pandian Stores 2 Serial Today 681 Episode

தனது தங்கை ஜெயில்ல் இருப்பதை எண்ணி மனம் வருந்திய முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் தூக்கம் வராமல் வீட்டு வாசலில் அமர்ந்து பாண்டியன் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதோடு, அரசி, ராஜீ மற்றும் மீனாவை தங்களது வீட்டிற்கு கூட்டி வந்து இங்கு தூங்க சொல்லலாமா என்று பேசிக் கொண்டிருந்தனர். மேலும், பாக்கியம் குடும்பத்தை ஒரு தட்டு தட்டி அவர்களாகவே இந்த கேஸை வாபஸ் வாங்க செய்திடலாமா என்று குமரவேல் மற்றும் முத்துவேல் சொல்ல வேண்டாம் வேண்டாம். பிறகு நம் மீதே அவர்கள் போலீஸில் புகார் கொடுத்துவிட்டால் என்ன செய்வது. அவர்கள் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல அனைவரும் அமைதியானார்கள்.

49
Pandian Stores 2Serial Thangmayil and Bakkiyam Emotional

கடைசியாக பாக்கியம் குடும்பத்தினர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதலில் மாணிக்கம் மற்றும் பாக்கியம் இருவரும் பேசிக் கொண்டனர். அதில், நாம் அவசரப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டோமோ என்று தோன்றுகிறது. நம் மீது போலீசில் புகார் கொடுத்தால் நாம் அவர்களிடம் பேசுவோமா? இல்லை அவர்கள் வீட்டிற்கு தான் போவோமா? அதனால் நாம் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மீனா வந்த போதே அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும் என்றார்.

59
Pandian Stores 2 Gomathi Hospitalized

இதற்கு பதில் கொடுக்கும் வகையில் அதெப்படி முடியும்? மீனா வந்த போன உடனேயே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டார்கள். வீட்டை விட்டு துரத்திய பிறகு கூட அவர்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தாள். ஆனால், அவளை வெளியில் துரத்திவிட்டார்கள். அத்தனை பேருக்கும் சோறு ஆக்கிப் போட்டு பத்திரமாக பார்த்துக் கொண்டாள். ஆனால், அவர்கள் கொஞ்சம் கூட அதைப் பற்றி நினைக்கவில்லை. உடனே வந்து கூட்டிக் கொண்டு போங்க என்று தான் சொன்னார்கள். அவர்களை சும்மா விடக் கூடாது. அவர்களை மிரட்டத்தான் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறோம். அவர்கள் தானாகவே வந்து மயிலை கூட்டிக் கொண்டு போவாங்க என்றார்.

69
Muthuvel and Sakthivel Emotional Scene

அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தங்கமயில் வந்தார். அம்மா, நாம் ரொம்ப தப்பு செய்துவிட்டோம். முதலிலேயே அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும், அவர்களுக்கு என்னுடைய படிப்பு, வயசு எல்லாம் ஒரு மேட்டரே இல்லை. இதுக்கு அப்புறம் நான் அந்த வீட்டில் வாழ முடியுமா? என்னை அவர்கள் சேர்த்து கொள்வார்களா என்று கேட்டார். அப்படியே பேசிக் கொண்டிருந்த நிலையில் நீ தூங்க மயில். நாளைக்கு கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறி அவரை தூங்க வைத்தார்.

79
Pandian Stores 2 Today Episode Update

இதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் வழக்கறிஞரும் மயில் வீட்டிற்கு வந்தார். அவரிடம் பொய் சொல்வது தப்பில்லையா? சொன்ன பொய்யால் தான் இந்த நிலைமையில் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் திரும்ப திரும்ப பொய் சொன்னால் எப்படி? என்று கேட்க, அதற்கு பாக்கியம், இது தான் கடைசி பொய், இனிமேல் பொய்யே சொல்லமாட்டோம் என்றார்.

89
Gomathi Health Condition in Pandiyan Stores

கோர்ட்டில் எல்லோரது முன்னிலையிலும் என்னுடைய புகுந்த வீட்டை பற்றி தப்பா பேச வேண்டுமா? அவர்கள் என்னை வெறுக்கமாட்டார்களா என்று கேட்டார். அதற்கு பாக்கியம் நாம் என்னா 10 வருஷம், 20 வருஷம் தண்டனையா வாங்கி தரப்போகிறோம். அவர்களை பயமுறுத்தத்தான் இப்படியெல்லாம் செய்கிறோம் என்று சொல்லி முடிப்பதற்குள் வழக்கறிஞரும் அவர்கள் கோர்ட்டுக்கு வந்ததும் மிரண்டு போவாங்க என்றார். Compromiseக்கு வரும் போது டிமாண்ட் எவ்வளவு என்று சொல்லி செட்டில் பண்ணிக் கொள்வோம் என்று வழக்கறிஞர் சொல்ல, அய்யோ எனக்கு பெரிய டிமாண்ட் எல்லாம் கிடையாது.

99
Pandian Family and Muthuvel Reunion

அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் அவ்வளவு தான் என்றார். மேலும், அதன் பிறகு அவர்கள் என்னை நல்லா பார்த்துக் கொள்வார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார். கடைசியில் பாக்கியம் தனது மகளிடம் கோர்ட்டுக்கு வந்து சொதப்பிவிடாத, பிறகு எங்களை ஜெயிலில் போட்டுவிடுவாங்க. அவர்கள் நம்ம வழிக்கு வந்து விடுவார்கள். அவர்களை தண்டிக்க வேண்டும் என்றெல்லாம் விருப்பம் இல்லை. ஆரம்பத்திலேயே சொன்னேன், உன்னுடைய புருஷனை கைக்குள்ள போட்டு வச்சுக்கோ என்று, ஆனால், நீ தான் கேட்கவில்லை. இப்போது இந்த நிலைமையில் வந்து நிற்கிறோம் என்று கூறி அழுதார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories