எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கலெக்டர் மதிவதினியாக எண்ட்ரி கொடுத்துள்ளவர் மெயின் வில்லனின் மனைவியா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனின் சூழ்ச்சிகளை மீறி ஜனனி வெற்றிகரமாக ஃபுட் டிரக் பிசினஸை தொடங்கி இருக்கிறார். ஜனனி இந்த பிசினஸை தொடங்க கடைசி நேரத்தில் உதவியவர் தான் கலெக்டர் மதிவதினி. அவர் செய்த உதவிக்காக அவரை சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவெடுக்கும் ஜனனி, அவரின் வீட்டுக்கே நேரடியாக செல்கிறார். அங்கு அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் உள்ளே விடமாட்டேன் என காவலாளி சொல்ல, அந்த சமயம் வெளியே வரும் மதிவதினி ஜனனியை உள்ளே அழைத்துச் செல்கிறார். இதன்பின்னர் இருவரும் அமர்ந்து பேசுகிறார்கள்.
24
யார் இந்த மதிவதினி?
அப்போது தன்னுடைய வாழ்க்கையை பற்றி கூறுகிறார் மதிவதினி. தான் இலங்கையை சேர்ந்த பெண் என்றும், அங்கு போர் நடந்தபோது அகதியாய் தமிழ்நாட்டுக்கு வந்ததாகவும், இங்கு வந்த பின்னர் தனக்கு அடைக்கலம் கொடுத்ததோடு, நன்கு படிக்க வைத்த தன்னோட வளர்ப்பு தந்தை தற்போது இறந்துவிட்டதாகவும் கூறும் மதிவதினி, தான் வாழ்க்கையில் செய்த ஒரு தவறு என்றால் அது திருமணம் தான் என்றும் கூறுகிறார். ஒருவரை காதலித்து திருமணம் செய்ததாகவும், குழந்தை பிறந்த பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தற்போது பிரிந்துவிட்டதாகவும் கூறுகிறார்.
34
டிஎஸ்பிக்கு உத்தரவிட்ட மதிவதினி
பின்னர் மதிவதினியுடன் ஜனனி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது டிஎஸ்பி வருகிறார். அவரிடம் குணசேகரன் கேஸ் பற்றி விசாரிக்கும் மதிவதினி, தாங்கள் முயற்சி செய்து வந்தாலும் அவர் எங்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்து தப்பித்துவிடுவதாகவும், அவரால் ரொம்ப நாள் ஓடி ஒளிய முடியாது. சீக்கிரம் பிடித்துவிடுவோம் என கூறுகிறார். நீங்கள் இரண்டு நாளில் குணசேகரன் பற்றிய அப்டேட் தராவிட்டால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிவிடுவேன் என எச்சரிக்கிறார் மதிவதினி. இதையடுத்து கிளம்ப ரெடியாகும் ஜனனியிடம், நானே உங்களை டிராப் பண்ணுகிறேன் என கூறுகிறார் மதிவதினி.
இதையடுத்து இருவரும் வெளியே வர, அப்போது ஒரு காரில் இருந்து இறங்கி வரும் நபர், பாப்பாவை அவளுடைய அப்பா பார்க்கணும்னு அழைத்து வர சொன்னதாக சொல்கிறார். அதற்கு மதிவதினி, கோர்ட்டில் சொன்ன டைமிங்கில் தான் பாப்பாவை அழைத்து செல்ல விடுவேன். இப்போ முடியாது என சொல்லிவிடுகிறார். இப்போ மட்டும் உங்க சாருக்கு பொம்பள பிள்ளை மேல எப்படி பாசம் வந்துச்சு என கேட்கிறார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறார். வந்து சென்ற நபரை பார்த்தால் அவர் மெயின் வில்லனாக பில்டப் கொடுக்கப்படும் ராணாவின் பிஏ போல தெரிகிறது. அப்படியென்றால் ராணா தான் மதிவதினியின் கணவரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.