Karthik and Mayilvaganam Plan Against Chandrakala in Karthigai Deepam : கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், சந்திரகலா தனது கணவர் வீட்டில் பொங்கல் வைத்து மயில்வாகனத்தின் சூழ்ச்சியால் அவர் சிக்கிக் கொள்ள, கார்த்திக் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்குகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் மனைவியை பிரிவதாக டிராமா செய்து கடைசியில் கார்த்திக் மாமியார் வீட்டிற்குள் வந்துள்ளார். தனது மாமியாருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் ஒரு பாதுகாப்பு கவசமாக கார்த்திக் இருந்து வருகிறார். ஆனால், சாமுண்டீஸ்வரிக்கு இருக்கும் முதல் மறைமுக எதிரியாக இருக்கும் சந்திரகலாவை காட்டிக் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் இப்போது அதற்கான சந்தர்ப்பத்தை கார்த்திக் பயன்படுத்திக் கொண்டார்.
25
Karthigai Deepam Today Episode Update
என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். கார்த்திகை தீபம் சீரியலுக்கான நாளைய எபிசோடிற்கான புரோமோ வெளியாகியுள்ளது. இதில், ஒரு புரோமோவில் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் ஒளிபரப்பானது. இதில், ரேவதியின் ஃப்ரண்ட்ஸ் வந்து, இந்த மாதிரி கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அப்படி இப்படி பேசியதாக கூறியிருக்கின்றனர்.
35
Mayilvaganam Plan Against Chandrakala
அதை கார்த்திக்கிடம் கூற, கார்த்திக் இல்லை இல்லை உன்னை மாதிரி ஒருவர் மனைவியாக கிடைச்சதற்கு நான் தான் அதிர்ஷ்டசாலி என்றார். அதற்கு நாம் இருவருமே அதிர்ஷ்டசாலிகள் என்று கூறினார். இதைத்தொடர்ந்து மற்றொரு புரோமோவில் காளியம்மாள் சந்திரகலாவிற்கு போன் போட்டு சிவனாண்டி வீட்டில் தான் அவருடன் சேர்ந்து தான் பொங்கல் வைக்க வேண்டும் என்று கூறினார். சந்திராவும் வருவதாக சொல்லி கணவரது வீட்டில் பொங்கல் வைத்தார்.
45
Karthik Action in Karthigai Deepam Serial
இதற்கிடையில் காளியம்மாள் மற்றும் சந்திரகலா இருவரும் போனில் பேசுவதை மயில்வாகனம் கேட்டுவிட்டார். இதைப் பற்றி கார்த்திக்கிடம் சொல்லவே, இருவரும் ஒரு பிளான் போட்டனர். அதன்படி அத்தை அத்தை சின்ன அத்தையை காணவில்லை. வீடு முழுவதும் தேடிப்பார்த்தேன். அவர் இல்லை. ஒருவேளை சிவணாண்டி தான் கடத்தியிருப்பாரோ என்று சொல்லவே, சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சிவனாண்டி வீட்டிற்கு புறப்பட்டார்.
55
Karthigai Deepam Serial Twist January 2026
அங்கு சென்று பார்த்த போது ஹாயாக சிரித்துக் கொண்டு பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சாமுண்டீஸ்வரி, சந்திரா என்று கத்தினார். அக்காவை பார்த்து ஷாக்கான சந்திரகலா என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றார். அதோடு நாளைய எபிசோடிற்கான புரோமோ முடிந்தது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.