நீதிபதி முன்பே அபாண்டமான பொய் புகார்!பாக்கியத்தின் நடிப்பால் அதிர்ச்சியில் பாண்டியன்-நீதிமன்றத்தில் வெடிக்கும் உண்மை!

Published : Jan 04, 2026, 12:45 PM IST

Pandiyan Stores 2 Serial This Week Promo Court Scene : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஜனவரி 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்குமான புரோமோ வீடியோவில் பாண்டியன் மற்றும் முத்துவேல் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்துள்ளார்களா என்று பார்க்கலாம்.

PREV
17
Pandiyan Stores 2 This Week 5th to 10th January 2026 - Promo Video

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில், கோர்ட் காட்சி இடம் பெற்றுள்ளது. எஃப் ஐ ஆருக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்ட பாண்டியன் குடும்பத்தினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். அவர்களிடமும், சாட்சியத்திடமும் விசாரணை நடக்கிறது. இறுதியில் பாண்டியன் குடும்பத்தினர் ஜாமீனில் வெளியில் வருகின்றனர். இதையடுத்து 2 குடும்பமும் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்று பார்க்கலாம். பாக்கியம் என்ன தைரியத்தில் போலீசில் புகார் கொடுத்தார் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

27
Pandian Stores 2 Serial Court Scene

கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் ஒளிபரப்பான 680ஆவது எபிசோடில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் கோமதி தனி சிறையில் தனி அடைக்கப்பட்டிருந்த நிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அதோடு அந்த வாரத்திற்கான எபிசோடு முடிந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்று இந்த வாரத்திற்கான எப்சோடில் காண்பிக்கப்படவில்லை.

37
Pandiyan Stores 2 Thangamayil and Saravanan Court Case

ஆனால், அவர் கோர்ட்டில் ஆஜராவது போன்று காட்டப்பட்டது. அதன்படி இந்த வாரத்திற்கான எபிசோடில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில், கதிர் ஆகியோர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதில் தங்கமயில் தனது குடும்பத்தோடு கோர்ட்டுக்கு வருகிறார். அப்போது தங்கமயிலின் அம்மா பாக்கியம் கூண்டில் ஏறி சாட்சி சொல்கிறார். தனது மகளுக்கு இந்த குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தேன். ஆனால், அவர்கள் குடும்பமாக சேர்ந்து தனது மகளை கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதார். மேலும், வீட்டை விட்டு துரத்திவிட்டாங்க. இப்போது விவாகரத்து கேக்குறாங்க என்றார்.

47
Will Pandiyan Family go to Jail?

இதற்கு பதிலளித்த பாண்டியன் அந்த பொண்ணுக்கு நாங்கள் எந்த கொடுமையும் செய்யவில்லை என்று பரிதாபமாக பேசினார். இதை தொடர்ந்து இந்த வழக்கிற்கு சாட்சியாக முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். அதில் முதலில் முத்துவேலுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், வீட்டிற்கு வந்து கொடுமைப்படுத்தும் அளவிற்கு என்னுடைய தங்கச்சி குடும்பம் அப்படி ஒன்றும் மோசமான குடும்பம் இல்லை என்று கூறினார்.

57
Pandiyan Stores 2 Serial Latest Twist

இவரைத் தொடர்ந்து சக்திவேல் பேசுவதற்கு கூண்டில் ஏறுகிறார். அவரைப் பார்த்ததும் பாக்கியத்திற்கு ஒரே மகிழ்ச்சி. ஏனென்றால், அவர் தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சொன்னார். அவரது பேச்சைக் கேட்டு பாக்கியமும் போலீசில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதை கேட்டு பாக்கியம் மற்றும் மாணிக்கம் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

67
Bakkiyam Acting Before Judge

இதைத்தொடர்ந்து முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரது சாட்சிகளின் அடிப்படையில் பாண்டியன், கோமதி, சரவணன், செந்தில் மற்றும் கதிர் ஆகியோர் சிறையிலிருந்து வெளியில் வருகின்றனர். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் கையெழுத்து போட்ட பிறகு ஸ்டேஷனை விட்டு வெளியில் வரும் போது முத்துவேல் கையை பிடித்து கொண்டு பாண்டியன் கதறி அழுதார். இதே போன்று இக்கட்டான சூழ்நிலையில் என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றுனீங்களே எனக்கு இது போதும் அண்ணே என்று கூறி அவரது மார்பில் சாய்ந்து அழுகிறார்.

77
Pandiyan Stores 2 Court Scene Today

அதோடு அந்த புரோமோ வீடியோ முடிகிறது. இதன் மூலமாக இரு குடும்பமும் ஒன்று சேர்ந்துவிட்டார்களா? இல்லையா என்பது பற்றி இனி வரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இனிமேல் பாக்கியத்தால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியுமா? தங்கமயிலின் வாழ்க்கை கேள்விக்குறியானது தான் மிச்சம். இனிமேல் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? உள்ளிட்ட பல கேள்விகளுடன் இந்த வாரம் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories