சோழனுக்கு அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி... சேரன், பாண்டியனா இப்படி செஞ்சாங்க? அய்யனார் துணை அப்டேட்

Published : Jan 13, 2026, 11:37 AM IST

அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் மற்றும் சேரன் இருவரும் தங்கள் காதலிகள் உடன் ரொமான்ஸ் செய்வதை பார்த்து ஷாக் ஆகிறார் சோழன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், பாண்டியனை பார்க்க அவரின் மெக்கானிக் ஷாப்பிற்கு வந்திருக்கிறார் வானதி. அங்கு வழக்கம்போல பாண்டியனிடம் வம்பிழுக்கிறார் வானதி. அதற்கு பாண்டியன், எல்லாமே உனக்காக தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். நாம சந்தோஷமா வாழ பணம் தேவை, அதற்காக தான் இந்த கடையை லீசுக்கு எடுத்துருக்கேன். அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தானே முன்னேற முடியும் என அட்வைஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார். அப்போது பேசும் வானதி, அன்னைக்கு பணம் கொடுக்கும் போது என்னை கூப்பிடவே இல்லேல்ல என கேட்கிறார்.

24
பாண்டியனுக்கு முத்தம் கொடுத்த வானதி

அதற்கு பாண்டியன், என்னோட அண்ணன், தம்பி எல்லாம் நான் சொல்லியா வந்தாங்க, அதேமாதிரி நீயா தான வரணும். உனக்கு ஒரு ஆள் சொல்லுவாங்களா, இதுவும் உன்னோட கடை மாதிரி தான என சொல்லி வானதியை சமாதானப்படுத்துகிறார் பாண்டியன். அதன்பின்னர் ரொமான்ஸ் மோடுக்கு செல்லும் வானதி, பாண்டியனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கு எண்ட்ரி கொடுக்கும் சோழன், இருவரும் முத்தம் கொடுப்பதை பார்த்து ஷாக் ஆகி, கடையை துறந்துவச்சிக்கிட்டு என்னடா பண்றீங்க, வேற யாராவது கஷ்டமர் வந்தா என்ன நினைப்பாங்க என சத்தம் போடுகிறார்.

34
சேரன் - சந்தா ரொமான்ஸ்

வானதி - பாண்டியனுக்கு அட்வைஸ் பண்ணிய கையோடு, நேராக தன்னுடைய அண்ணன் சேரன் வேலை பார்க்கும் பில்டிங்குக்கு செல்கிறார் சோழன். அங்கு பார்த்தால் சந்தா, சேரனோடு ரொமான்ஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார். திடீரென சேரனுக்கு சந்தா முத்தம் கொடுக்கிறார். அதை சோழன் பார்த்துவிடுகிறார். என்னடா இது அங்க தான் பாண்டியன் அட்டகாசம் பண்றான்னு பார்த்தால், இங்க அண்ணனும் இப்படி இறங்கிட்டாரே என ஷாக் ஆகிறார். பின்னர் சேரனிடம், சென்று பேசும் சோழன், என்ன அண்ணேன், எனக்கு தான் அட்வைஸ் எல்லாமா உங்களுக்கு அதெல்லாம் இல்லையா என கேட்கிறார்.

44
சோழனுக்கு நோஸ் கட் பண்ணிய நிலா

பின்னர் அங்கிருந்து, நேராக நிலாவை சந்திக்க செல்லும் சோழன், பாண்டியன் மற்றும் சோழன் இருவரும் ரொமான்ஸ் செய்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு நிலா, ஆமா அவங்க ஒரு பொண்ணை சின்சியரா லவ் பண்றாங்க, அதனால அவங்களுக்கு முத்தம் கிடைக்குது. நீ அப்படியா இருக்க, ஒரு பொண்ணையும் விட மாட்டேங்குற என சோழனை குத்திக்காட்டி பேசுகிறார். இதனால் சோகமாக மூஞ்சை வைத்துக் கொள்கிறார் சோழன். இதையடுத்து என்ன நடந்தது? சோழனுக்கும் நிலாவிடம் இருந்து முத்தம் கிடைத்ததா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories