பழி சுமத்திய பாக்கியம்... அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம்!
விசாரணையின் போது, பாண்டியன் குடும்பத்தினர் தாங்கள் வைத்திருந்த நகைகளை பாக்கியத்திடம் ஒப்படைக்கின்றனர். நகையைச் சோதித்த பாக்கியம், திடீரென கூச்சலிட்டு நாடகமாடத் தொடங்குகிறார். "நகையெல்லாம் கருத்துப் போயிருக்கு... இது போலியான நகை! பாண்டியன் குடும்பத்தினர் என் மகளின் உண்மையான நகைகளை மாற்றி வைத்துவிட்டு ஏமாற்றுகிறார்கள்" என அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்.
அங்கிருந்த போலீசார் நகைகளைச் சோதித்துவிட்டு, இரண்டு நகைகளைத் தவிர மற்றவை அனைத்தும் 'கவரிங்' என்று கூற, பாக்கியத்தின் ஆட்டம் இன்னும் அதிகமாகிறது. "என் பொண்ணு வாழ்க்கையும் போச்சு, நகையும் போச்சு" என கதறி அழுது நாடகமாடும் அவர், "மீனாவின் கணவர் செந்திலுக்கு வேலை வாங்கவும், வியாபாரத்துக்கும் என் மகள் நகையைத் தான் பயன்படுத்தினார்கள்" எனப் புதுப் புகாரைக் கிளப்புகிறார்.
அதிரடி காட்டிய மீனா: தவிடுபொடியான தந்திரம்!
பாக்கியத்தின் இந்த வெற்று ஆர்ப்பாட்டத்தையும், பாண்டியன் குடும்பத்தின் கௌரவத்தைச் சிதைக்கும் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த மீனா, பொறுமையிழந்து குறுக்கிடுகிறார்.
போலீசாரிடம் உண்மையை உடைக்கும் மீனா, "தங்கமயிலுக்குத் திருமணத்தின் போது அவர்கள் போட்டது தங்க நகையே இல்லை. 80 பவுன் என்று ஊரை ஏமாற்றினார்கள், ஆனால் அதில் வெறும் 8 பவுன் மட்டுமே தங்கம், மீதி அனைத்தும் கவரிங்!" என அதிரடியாகப் போட்டு உடைக்கிறார். இந்த உண்மையை மீனா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த இடத்துடன் இன்றைய எபிசோட் மயிர் கூச்செரியும் திருப்பத்துடன் நிறைவடைந்தது.
உண்மை வெல்லும் காலம்
பாக்கியத்தின் சூழ்ச்சி வலைக்குள் பாண்டியன் குடும்பம் சிக்கப்போகிறதா? அல்லது மீனா நிரூபிக்கும் உண்மைகளால் தங்கமயிலின் குடும்பம் தலைகுனியப் போகிறதா? அடுத்தடுத்த எபிசோடுகளில் உண்மை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.