அய்யனார் துணை சீரியலில் நிலாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பிய ராகவ்விற்கு சோழன் தன் பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் நடேசனின் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் சேரனின் காதலி சந்தா, பாண்டியனின் லவ்வர் வானதி ஆகியோரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டில் அனைவரும் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். குறிப்பாக சேரனையும் சந்தாவையும் ஜோடியாக நிற்க வைத்து வித விதமாக போஸ் கொடுக்கும்படி கூறி, நிலா போட்டோ எடுக்கிறார். இதைப் பார்த்து கடுப்பாகும் வானதி, நம்மளும் இதே மாதிரி செல்பி எடுக்கலாம் என பாண்டியனை வலுக்கட்டாயமாக வர வைத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்.
25
காதலி உடன் ரொமான்ஸ் பண்ணும் பல்லவன்
இப்படி அண்ணன்கள் எல்லாம் காதலிகளுடன் ஜாலியாக இருந்தால், தம்பி மட்டும் சும்மா இருப்பாரா என்ன, பல்லவனும் தன்னுடைய காதலியை பார்க்க அவருடைய ரூமுக்கே சென்றிருக்கிறார். அவருடைய தோழிகள் யாரும் ரூமில் இல்லாததால், தன் காதலிக்காக பொங்கல் எடுத்துச் சென்றிருக்கிறார் பல்லவன். அதை பிளேட்டில் அழகாக டெகரேட் பண்ணி அவரிடம் கொடுக்க, பல்லவனின் காதலி இம்பிரஸ் ஆகிறார். சோழன் அண்ணனுக்கு மட்டும் கல்யாணம் ஆகலேனா இந்நேரம் நம்ம ரெண்டு பேரும் பொங்கல் கொண்டாடிருப்போம், சரிவிடு அடுத்த வருஷம் தல பொங்கலை கொண்டாடிடலாம் என சொல்கிறார் பல்லவன்.
35
போட்டோஷூட் நடத்தும் நிலா
இதையடுத்து வீட்டில் இருந்து சோழனை வெளியே அழைத்து வரும் நிலா, தன்னுடைய போனை அவரிடம் கொடுத்து, தன்னை போட்டோ எடுக்குமாறு கூறுகிறார். இதையடுத்து கோலம் போடுவது போலவும் கரும்பை கடிப்பது போலவும் விதவிதமாக போஸ் கொடுக்கிறார் நிலா. அந்த போட்டோவை பார்க்கும் நிலா, இதில் நான் அழகாவே இல்லை என சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று மேக் அப் போட செல்கிறார். அங்கு சென்று தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டு நிலா வரும் கேப்பில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறார்.
நிலா உள்ளே சென்றிருந்ததால், அவரின் போன் சோழனிடம் தான் இருக்கிறது. அப்போது ராகவ்விடம் இருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ் வருகிறது. அவர் நிலாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லி அனுப்பி இருக்கிறார். மேலும் அதில், இந்த பொங்கல் தான் நீங்க தனியா செலிபிரேட் பண்ணுற கடைசி பொங்கல், அடுத்த வருஷத்தில் இருந்து நாம ஒண்ணா சேர்ந்து செலிபிரேட் பண்ணலாம். அந்த நாளுக்காக தான் நான் காத்திருக்கிறேன் எனவும் கூறி இருக்கிறார் ராகவ். இதை ஒபன் பண்ணி கேட்டுவிடுகிறார் சோழன். இதைக் கேட்டதும் கடுப்பாகும் சோழன் அவருக்கு உடனே ரிப்ளையும் பண்ணுகிறார்.
55
நிலா போனில் இருந்து சோழன் அனுப்பிய ரிப்ளை
அவர் போட்ட ரிப்ளை மெசேஜில், ஏன் டா டோமர் தலையா, பாஸ்னா என்னவேனா மெசேஜ் பண்ணுவியா, உன்கூட நான் ஏன் டா பொங்கல் கொண்டாடனும், பரதேசி பையலே என டைப் பண்ணி அனுப்பிவிடுகிறார் சோழன். இதை ராகவ்வும் படித்துவிடுகிறார். பின்னர் தான் இதை நிலா போனில் இருந்து அனுப்பிட்டோமே இது அவங்க பார்த்த என்ன ஆகுறது என நினைத்து அந்த மெசேஜை டெலிட் பண்ணிவிடுகிறார் சோழன். அந்த நேரம் பார்த்து நிலாவும் ரெடியாகி வருகிறார். இதன்பின்னர் போட்டோஷூட்டை இருவரும் தொடர்கிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.