Siragadikka Aasai Serial 03 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா - ரேகாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த வந்துள்ளார் சிந்தாமணி. இதையடுத்து என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவும் சத்யாவும் காதலித்த நிலையில், அவர்களை சேர விடக்கூடாது என சிந்தாமணி முடிவெடுத்து ரேகாவை ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருந்தார். பின்னர் முத்துவும் மீனாவும் ரேகாவை சிந்தாமணி மற்றும் அவரது கணவரின் பிடியிலிருந்து மீட்டு, அவரை கடத்தி வந்து முத்து தன்னுடைய பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளார். சிந்தாமணி இந்த திருமணத்தை நடக்க விட மாட்டார் என்பதால், ரேகாவுக்கும் சத்யாவுக்கும் பாட்டியின் ஊரில் வைத்தே திருமணம் செய்து வைத்து விடலாம் என முடிவெடுத்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார் முத்து.
ரேகா சத்யாவின் திருமணத்திற்காக குடும்பத்தினர் அனைவரும் பாட்டியின் ஊருக்கு வந்துள்ள நிலையில், அங்கு கல்யாணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. விஜயாவும் இந்த கல்யாணத்திற்கு வந்திருக்கிறார். ரேகாவுக்கு சத்யாவுடன் எப்படியாவது கல்யாணம் நடக்க வேண்டும் என்பதில் விஜயாவும் ஆவலோடு இருக்கிறார். ஏனெனில் சிந்தாமணியிடம் உன்னுடைய மகள் ஒன்னும் இல்லாதவன் கூட ஓடிப் போக போறா பாரு என சவால் விட்டிருந்தார் விஜயா. அந்த சவாலில் தான் ஜெயிக்க இருப்பதால் இந்த திருமணம் நடைபெறும் விஷயத்தை சிந்தாமணி இடம் சொல்லி விடுகிறார் விஜயா.
34
திருமணத்தை நிறுத்தும் சிந்தாமணி
ரேகாவும் சத்யாவும் திருமண கோலத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடையும் சிந்தாமணி உடனடியாக தன்னுடைய கணவருடன் காரில் கிளம்பி முத்துவின் பாட்டி ஊருக்கு செல்கிறார். இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற முடிவில் சிந்தாமணி இருக்கிறார். சரியாக ரேகாவுக்கு சத்யா தாலிக்கட்டும் நேரத்தில் அங்கு வந்து விடுகிறார் சிந்தாமணி. அப்போது அவர் நிறுத்துங்க என கத்த, அனைவரும் ஷாக் ஆகிறார்கள். பின்னர் மண மேடையில் இருக்கும் தன்னுடைய மகளை அங்கிருந்து இழுத்துச் செல்ல வருகிறார் சிந்தாமணி.
உடனே முத்து குறுக்கிட்டு சிந்தாமணியை தடுக்கிறார். அப்போது முத்துவை அடிக்க பாய்கிறார் சிந்தாமணி. பின்னர் அங்கிருந்தவர்களும் சிந்தாமணிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ரேகாவின் திருமணம் சிந்தாமணி கண் முன்னே நடக்கிறது. இதைப் பார்த்து உற்சாகமடையும் விஜயா, பாத்தியா நான் சொன்ன மாதிரியே உன் பொண்ணு ஒன்னும் இல்லாதவன கல்யாணம் பண்ணிக்கிட்டா என கூறுகிறார் விஜயா. இதைக் கேட்டு கடுப்பான சிந்தாமணி, அரிவாளை எடுத்து வந்து ரேகாவை வெட்ட வருகிறார். அப்போது முத்து அவரை தடுத்து நிறுத்துகிறார். பின்னர், நீங்க ரெண்டு பேரும் நல்லாவே இருக்க மாட்டீங்க என சாபம் விடுகிறார் சிந்தாமணி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதை அடுத்து என்ன நடந்தது என்பதை இனிவரும் எபிசோடுகளில் விரிவாக பார்க்கலாம்.