Pandian Stores 2 : குமாருக்கு வில்லங்கமான குடும்பத்தில் சம்பந்தம் பேசி முடித்த சக்திவேல்... அதிர்ச்சியில் கோமதி..!

Published : Jul 02, 2026, 09:49 AM IST

Pandian Stores 2 Serial 02 July 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமாருக்கு தங்கமயிலின் தங்கையை திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து உள்ளார் சக்திவேல்.

PREV
14
Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், மீனா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு சிகிச்சை முடிந்து, அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல சொல்கிறார் டாக்டர். அப்போது மீனாவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக மீனாவின் தந்தை சொல்ல, கோமதி அவரை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என கூறுகிறார். பின்னர் மீனாவிடமே எங்கு செல்ல விருப்பம் என கேட்கிறார்கள். அவர் கோமதி வீட்டுக்கு செல்ல சம்மதிக்கிறார்.

Siragadikka Aasai : சகுனி வேலை பார்த்த விஜயா... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு வந்த புது சிக்கல்

24
குமாருக்கு வரன் பார்த்த சக்திவேல்

மறுபுறம் சக்திவேல், குமாருக்கு வரன் பார்த்துள்ள விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல ஆர்வமுடன் வருகிறார். அங்கு வந்ததும், குமாருக்கு வேறு ஒரு பெண் பார்த்திருக்கிறேன். அவர் வேறுயாருமில்லை, சரவணனின் மனைவி தங்கமயிலின் தங்கச்சி முத்து தான் என கூறுகிறார். அதைக்கேட்டதும் ஷாக் ஆன காந்திமதி, அந்த பொண்ணு குமாருக்கு தங்கச்சி முறை வரும் என சொல்ல, அந்த சரவணன் தான் தங்கமயிலை டைவர்ஸ் பண்ணப் போறான்ல, அப்புறம் என்ன உறவு முறை, அதனால் இந்த திருமணத்தை பேசி முடித்துவிட்டேன் என கூறுகிறார்.

34
மீனாவுக்கு சப்போர்ட் பண்ணும் கோமதி

இதையடுத்து மீனாவை வீட்டுக்கு அழைத்து வந்த கோமதி அவருடன் சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உனக்கும், செந்திலுக்கும் ஏதாச்சும் பிரச்சனையா என விசாரிக்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கு வரும் பாண்டியன், மீனாவிடம் நலம் விசாரிக்கிறார். அப்போது எதிரே அமர்ந்திருந்த செந்திலிடம் பொண்டாட்டியை ஒழுங்கா பாத்துக்க மாட்டியாடா என சத்தம் போடுகிறார். அதுமட்டுமின்றி, அவர் உடல்நிலை சரியாகும் வரை இங்கு தான் இருப்பார் என கூறுகிறார். ஆனால் செந்தில் நான் நாளைக்கு காலையில அவளை குவாட்ரஸுக்கு கூட்டிட்டு போறேன் என சொல்கிறார்.

44
ஷாக் ஆகும் கோமதி

செந்திலை திட்டும் கோமதி, அவ இங்க தான் இருப்பா என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிடுகிறார். அப்போது அங்கு வரும் பழனி, உங்க எல்லார்கிட்டையும் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என கூறி, குமாருக்கு பெண் பார்த்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். அதுவும் அந்த பெண் யாரென்றால் நம்ம தங்கமயிலோட தங்கச்சி என சொன்னதும் அதிர்ச்சி அடையும் கோமதி, அவதான் அவனுக்கு முறை வராதே என சொல்ல, உடனே பழனி அதான் சரவணனுக்கு டைவர்ஸ் ஆகப்போகுதுல்ல அப்புறம் என்ன முறை வேண்டியதிருக்குனு அண்ணேன் சொல்லிருச்சு என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

Read more Photos on
click me!

Recommended Stories