Published : Sep 10, 2026, 10:10 AM ISTUpdated : Sep 10, 2026, 10:12 AM IST
Bigg Boss promo: பிக்பாஸ் வீட்டில் அன்றாட விஷயங்கள்கூட சில நேரங்களில் பெரிய விவாதமாக மாறிவிடுகின்றன. அந்த வகையில் மதிய உணவுக்காக புளியோதரை செய்வது குறித்து கேப்டன் ஷாதிகா பேசிக் கொண்டிருந்தபோது, முனியம்மாளின் செயலால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் அன்றாட விஷயங்கள்கூட சில நேரங்களில் பெரிய விவாதமாக மாறிவிடுகின்றன. அந்த வகையில் மதிய உணவுக்காக புளியோதரை செய்வது குறித்து கேப்டன் ஷாதிகா பேசிக் கொண்டிருந்தபோது, முனியம்மாளின் செயலால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு தொடர்பான விஷயம் என்றாலே அது சாதாரணமாக முடிவதில்லை போலிருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில், புளியோதரைக்கு போட்டியாளர் முனியம்மாள் கொடுத்த ரியாகஷன் பரபரப்பாக வெடித்துள்ளது. முதலில் சாதாரணமாக தொடங்கும் வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தனிப்பட்ட கருத்து மோதலாக மாறிய நிலையில், சக போட்டியாளர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
24
நடந்தது என்ன?
மதிய உணவிற்கு புளியோதரை செய்யலாம் என கேப்டன் ஷாதிகா கூறியதாக தெரிகிறது. அப்போது முனியம்மாள் செய்ததாகக் கூறப்படும் ஒரு அநாகரிகமான செயலை ஷாதிகா சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், போட்டியாளர்கள் சிலரும், “நீங்கள் இப்படி செய்யக்கூடாது” என முனியம்மாளிடம் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதனால் அங்கிருந்த சூழல் படிப்படியாக பரபரப்பை ஏற்படுத்தியது. உணவு குறித்த சாதாரண பேச்சு, போட்டியாளர்களுக்கு இடையிலான தனிப்பட்ட கருத்து வேறுபாடாக மாறியுள்ளது.
#Day4 #Promo1 of #BiggBossTamil
Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/I54I11Fxvb
— Vijay Television (@vijaytelevision) September 10, 2026
34
“நான் உன்னை அவமதித்தால்...”
இதற்கு முனியம்மாள் கோபமாக பதிலளித்துள்ளார். “நான் உன்னை அவமதித்தால், நீ என்னிடம் டீல் செய்ய வேண்டும்” என்ற வகையில் தனது நிலைப்பாட்டை அவர் அழுத்தமாக எடுத்துரைத்துள்ளார். புளியோதரையைப் பற்றிய பேச்சு ஒரு கட்டத்தில் தனிப்பட்ட கருத்து மோதலாக மாறுகிறது.
கேப்டன் என்ற முறையில் முனியம்மாளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஷாதிகா, அவரை கார்டன் பகுதிக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால், ஷாதிகாவின் இந்த உத்தரவை ஏற்க முனியம்மாள் மறுத்துள்ளார். “என்னால் வெளியே செல்ல முடியாது. முடிந்தால் நீங்கள் 18 பேரும் வெளியே போங்கள்” என எதிரில் இருந்த போட்டியாளர்களிடம் தனது நிலைப்பாட்டை அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
முனியம்மாளின் இந்த அதிரடியான பதில், அங்கிருந்த போட்டியாளர்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளியோதரையை மையமாகக் கொண்டு தொடங்கிய இந்த விவகாரம், கேப்டன் உத்தரவு, தனிப்பட்ட கருத்து மோதல் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றிருப்பது பிக்பாஸ் வீட்டில் புதிய பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளதா?என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.