பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டு தலையாக இருக்கும் கானா வினோத், தன்னிடம் திமிராக நடந்துகொண்ட சாண்ட்ராவை படையப்பா ஸ்டைலில் டீல் பண்ணி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கானா வினோத், பார்வதி, கம்ருதீன், அமித், திவ்யா, சாண்ட்ரா, எஃப் ஜே, விக்கல்ஸ் விக்ரம், சுபிக்ஷா, சபரி, கனி, அரோரா ஆகிய 12 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார். அது யார் என்பதை இன்னும் யூகிக்க முடியவில்லை. இருப்பினும் கானா வினோத்துக்கு டைட்டில் வின்னர் ஆவதற்கான சான்ஸ் இருப்பதாக நெட்டிசன்கள் கணித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் ஒரு தரமான சம்பவம் செய்திருக்கிறார் வினோத்.
24
வெறுப்பை சம்பாதிக்கும் சாண்ட்ரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் மிகவும் வீக் ஆனவர் யார் என்று கேட்டால், அனைவருமே சாண்ட்ராவை தான் கூறுவார்கள். ஏனெனில் அவர் பிரஜன் வெளியே சென்றதில் இருந்தே சிம்பதி கேம் ஆடி வருகிறார். குறிப்பாக பிரஜன் வெளியே சென்றதற்கு திவ்யா தான் காரணம் என்று கூறுவதோடு, திவ்யா மீது கடும்கோபத்திலும் இருக்கிறார் சாண்ட்ரா. கடந்த வாரம் விஜய் சேதுபதி சென்ற பிறகு, திவ்யா ஒரு நிமிஷம் பேச அழைத்தபோது கூட அதனை மிகப்பெரிய பிரச்சனை ஆக்கினார் சாண்ட்ரா. அவர் செய்வதற்கெல்லாம் தலையாட்டும் பார்வதி, கூடவே இருந்து கொளுத்திப் போட்டு வருகிறார்.
34
அட்வைஸ் பண்ணிய கானா வினோத்
சாண்ட்ரா தொடர்ந்து கார்டன் ஏரியாவிலேயே இருப்பதை பார்த்து இந்த வார தலைவரான கானா வினோத், இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரை திவ்யா உடன் சென்று பேசுமாறு கூறி இருக்கிறார். ஆனால் சாண்ட்ரா அதற்கு செவி சாய்க்கவே இல்லை. உங்கமேல தப்பு இல்லேனா நேருக்கு நேர் சென்று பேசுவதற்கு என்ன தயக்கம். கண்ணீரை ஆயுதமாக பயன்படுத்தி ஒரு ஓரமாக உட்கார்ந்தால் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் உங்க பின்னாடி வந்துவிட மாட்டார்கள். இது கேம், இங்க இப்படியெல்லாம் நீங்க ஆடிகிட்டு இருக்க முடியாது என சாண்ட்ராவிடம் ஓப்பனாகவே கூறிவிட்டார் கானா வினோத்.
ஆனால் சாண்ட்ரா, அவரின் பேச்சை அவமதிக்கும் விதமாக, அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய காலை நீட்டி செருப்பை ஆட்டி இருந்தார். இதைப்பார்த்து டென்ஷன் ஆன கானா வினோத், நீ நீலாம்பரி மாதிரி செஞ்சேனா, நான் படையப்பா மாதிரி பண்ணுவேன் எனக் கூறி, உடனே சாண்ட்ரா முன்பு கால்மேல் கால் போட்டு அமர்ந்து கெத்து காட்டி இருக்கிறார். இதற்கு படையப்பா பிஜிஎம் போட்டு வீடியோ வெளியிட்டு நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.