மோசமான அசைவை காட்டும் பிக் பாஸ் ரம்யா ஜோ..! சாக்கடையாக மாறிப் போன விஜய் டிவி ஷோ.. கழுவி ஊற்றும் மக்கள்

Published : Oct 08, 2025, 11:09 AM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள ரம்யா ஜோ, இதற்கு முன்னர் மேடையில் டான்ஸ் ஆடும்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

PREV
14
Ramya Joo Angry During Stage Dance

பிக் பாஸ் வரலாற்றில் மோசமான சீசன் என பெயர் எடுத்து வருகிறது பிக் பாஸ் சீசன் 9. இந்த நிகழ்ச்சி தொடங்கும் போதே எந்த வித ஹைப்பும் இல்லாமல் தான் தொடங்கியது. சரி ஆரம்பமான பின்னராவது பிக் அப் ஆகும் என எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இந்த முறை பிக் பாஸ் டீம் ஆட்கள் தேர்விலேயே கோட்டைவிட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் யூடியூபர்கள் மற்றும் சோசியல் மீடியா பிரபலங்களை தான் போட்டியாளர்களாக களமிறக்கி இருக்கிறார்கள். அதிலும் வாட்டர்மிலன் ஸ்டார், அகோரி கலையரசன் ஆகியோரது வருகை ரசிகர்களுக்கே ஷாக் ஆக இருந்தது.

24
பிக் பாஸ் வீட்டில் அதிகரிக்கும் சண்டை

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை முதல் இரண்டு வாரங்கள் பெரியளவில் டாஸ்க்குகள் எதுவும் இருக்காது என்பதால் கலகலப்பாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் வந்த முதல் நாளில் இருந்தே சண்டை தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சண்டை போட்டால் தான் கேமரா போக்கஸ் நம்பக்கம் திரும்பும் என்பதில் அனைவருமே நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக வாட்டர்மிலன் ஸ்டார் திவாகருடன் தான் அனைவரும் மல்லுக்கட்டுகிறார்கள். நேற்று ரம்யா ஜோ சண்டை போட்டார். அவரைத் தொடர்ந்து எஃப் ஜே, கம்ருதீன், சபரி என அனைவரும் அவருடன் சண்டை போடுகிறார்கள்.

34
ரம்யா ஜோவின் வீடியோ வைரல்

விஜே பார்வதி சண்டைக்கோழியாக இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர் ஆனால் அவரையே மிஞ்சும் அளவுக்கு ரம்யா ஜோ இருக்கிறார். அவர் நேற்று பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்ட பின்னர் தான் அவரைப் பற்றிய பழைய வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளி வருகிறது. அவர் கோவில் திருவிழாக்களில் அரைகுறை ஆடையோடு டான்ஸ் ஆடி பிரபலம் ஆனார். அப்படி கோவில் திருவிழாக்களில் டான்ஸ் ஆடும் போதும் அங்கு அதைப் பார்க்க வந்தவர்களிடமே ரம்யா ஜோ சண்டை போட்டு இருக்கிறார். அவர் சண்டை போடும் பல வீடியோக்கள் இணையத்தில் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி உள்ளனர்.

44
கழுவி ஊற்றும் ரசிகர்கள்

குறிப்பாக அவர் ஒருமுறை மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கும்போது கீழே இருந்த ஒருவரை பார்த்து மோசமான அசைவை காட்டி இருப்பதோடு, அந்த நபரை கொச்சையாக திட்டி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதைப்பார்த்து தான் இவரை பிக்பாஸுக்கு தேர்வு செய்தார்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். திவாகர், அகோரி கலையரசன், ரம்யா ஜோ போன்றவர்களால் பிக் பாஸ் நிகழ்ச்சி சாக்கடையாக மாறி வருவதாக மக்களும் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories