விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், பாக்கியலட்சுமியாக சுசித்ரா ஷெட்டி, கோபியாக சதீஷ்குமார், பாக்கிலட்சுமியின் மாமனார் ராமமூர்த்தியாக எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக ராஜலக்ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர்.