எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஈஸ்வரியை ஆதி குணசேகரன் தான் தாக்கி இருக்கிறார் என்கிற உண்மை ஜீவானந்தத்திற்கு தெரியவந்ததை அடுத்து, அவர் அந்த தகவலை ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியிடம் கூறுகிறார். மேலும் அந்த ஆதாரம் மட்டும் போதாது எனக் கூறும் ஜீவானந்தம், அதுகுறித்த மேலும் ஆதாரங்களை வீட்டில் இருந்து திரட்ட சொல்கிறார். உடனே ஜனனியும், அறிவுக்கரசியிடம் ஏதோ ஒன்று இருக்கிறது அதை எடுக்க முயற்சிக்கிறோம் என கூறுகிறார். இதையடுத்து வீட்டில் பூஜை நடத்துகிறார்கள். அந்த பூஜையில் வீட்டு மருமகள்கள் கலந்துகொள்ள வேண்டும் என சொல்ல, ஜனனி மற்றும் இருவரும் கலந்துகொள்கிறார்கள்.
24
சிக்கும் அறிவுக்கரசியின் போன்
அப்போது தர்ஷன் ஏதோ மயக்கத்தில் இருப்பதை கண்டுபிடிக்கும் சக்தி, அவனிடம் பேச முயற்சிக்கிறார். ஆனால் அன்பு மற்றும் அறிவு இருவரும் தடுக்கிறார்கள். இதையடுத்து பூஜை செய்த கலச நீரை வீடு முழுவதும் தெளித்து விடச் சொல்கிறார் பூசாரி. பின்னர் ஜனனி வீட்டின் வெளியே கலச நீரை தெளித்து விடுகிறார். அதேபோல் நந்தினி மற்றும் ரேணுகா வீட்டின் உள்ளே கலச நீரை தெளிக்கிறார்கள். அப்போது அறிவுக்கரசியின் போன் வீட்டில் தனியாக இருப்பதை பார்க்கிறார் ஜனனி. இதையடுத்து நந்தினிக்கு போன் போட்டு, ரூமில் இருக்கும் அறிவுக்கரசியின் போனை எடுக்கச் சொல்கிறார்.
34
ஜனனியிடம் சவால்விடும் அறிவு
ஜனனி சொன்னபடி ரூமுக்குள் கலச நீரை தெளிக்க செல்லும் நந்தினி, அங்கிருந்து அறிவுக்கரசியின் போனை எடுத்துவிடுகிறார். இதையடுத்து அவர்கள் போனின் லாக்கை எடுப்பதற்குள் அவர்களிடம் இருந்து போனை பிடுங்கிவிடுகிறார் அறிவுக்கரசி. நாங்க கண்டுபிடிக்க நினைப்பதெல்லாம் கூடிய சீக்கிரம் எங்க கைக்கு வரும் என சவால் விடுகிறார் ஜனனி. அதற்கு அவர், மொதல்ல ஏதாச்சும் செய், அதுக்கப்புறம் வசனம் பேசு என கூறிவிட்டு செல்கிறார். அவர் வீராப்பாக சொல்லிவிட்டு சென்றாலும் அறிவுக்கரசியின் கண்ணில் ஒரு பயம் இருப்பதாக சொல்கிறார் ஜனனி.
ஈஸ்வரியை குணசேகரன் தாக்கியதற்கான ஆதாரம் இந்த வீட்டிற்குள் தான் எங்கேயோ ஒளிந்திருக்கிறது என சந்தேகப்படுகிறார் ஜனனி. பின்னர் கீழே இறங்கி வரும் அறிவுக்கரசி, தன்னிடம் உள்ள ஆதாரத்தை அவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்கிற பயத்தோடு இருக்கிறார். அதன்பின்னர் என்ன ஆனது? அறிவுக்கரசியிடம் இருக்கும் ஆதாரத்தை ஜனனி கண்டுபிடித்தாரா? ஜீவானந்தத்தை கொல்வதற்காக வலைவீசி தேடும் புலிகேசி, அவர் இருக்கும் இடத்தை நெருங்கினாரா? என பல்வேறு எதிர்பாரா திருப்பங்களுடன் இனி வரும் எபிசோடு அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.