சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை விஜயா கடத்திய விஷயம் அண்ணாமலைக்கு தெரிய வந்த நிலையில், அவர் செம டோஸ் கொடுத்திருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் வீட்டில் இருப்பது பிடிக்காததால், அவனை வீட்டை விட்டே துரத்த முடிவெடுத்த விஜயா, இதற்காக சிந்தாமணியிடம் ஐடியா கேட்க, அவரும் கிரிஷை கடத்தி வேறு ஊரில் ஆசிரமத்தில் சேர்த்துவிடலாம் என கூறுகிறார். அதற்கு விஜயாவும் ஓகே சொன்னதை அடுத்து சிந்தாமணி தன்னுடைய ஆட்களை வைத்து கிரிஷை கடத்துகிறார். அப்போது கிரிஷை ஸ்கூலில் இருந்து அழைத்து செல்ல வந்த முத்து, கடத்தல் கும்பலை பின் தொடர்ந்து சென்று, அவர்களை அடித்து துரத்திவிட்டு, கிரிஷை அந்த ரெளடிகளிடம் இருந்து காப்பாற்றிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
கிரிஷை காப்பாற்றிய முத்து
மேலும் கிரிஷை கடத்திய ரெளடிகளிடம் இதை செய்ய சொன்னது யார் என முத்து மிரட்டி கேட்க, அவர்களும் பயந்து, சிந்தாமணி தான் இதை செய்ய சொன்னதாக கூறுகிறார்கள். பின்னர் கிரிஷை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்லும் முத்துவிடம், ஏண்டா கிரிஷ் பயந்த மாதிரி இருக்கான் என அண்ணாமலை கேட்க, அதற்கு அவர் அவனை ரெளடி கும்பல் கடத்திட்டு போன அப்படி தான் இருப்பான் என சொல்கிறார். கிரிஷ் கடத்தப்பட்டதையும் அவனை தான் காப்பாற்றி அழைத்து வந்திருக்கும் விஷயத்தையும் முத்து கூறுகிறார். இதைக்கேட்ட விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
34
விஜயாவிற்கு செம டோஸ் கொடுக்கும் அண்ணாமலை
கிரிஷை யார் கடத்துனது என அண்ணாமலை கேட்க, அதற்கு அவர் சிந்தாமணி தான் கடத்தி இருக்கிறார் என சொல்கிறார். அவ எதற்கு கடத்தனும் என கேட்டதும், எல்லாம் நட்புக்காக தான் என சொல்கிறார் முத்து. கிரிஷ் இந்த வீட்டில் இருப்பது பிடிக்காமல் அவனை சிந்தாமணியிடம் சொல்லி கடத்த சொன்னதே அம்மா தான் என முத்து சொன்னதும், அண்ணாமலை உட்பட அனைவரும் ஷாக் ஆகிறார்கள். உண்மை தெரிந்ததால் தயங்கியபடி நிற்கும் விஜயாவை பளார் என அறைய செல்கிறார் அண்ணாமலை. அப்போது அவரை அனைவரும் தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். பின்னர் விஜயாவை திட்டுகிறார் அண்ணாமலை.
விஜயாவின் இந்த செயலால் டென்ஷன் ஆன அண்ணாமலை, முத்துவிடம் போலீசுக்கு போன் போட்டு வர சொல்கிறார். இவளையெல்லாம் ஜெயிலில் போட்டால் தான் புத்தி வரும் என அண்ணாமலை சொல்ல, தான் கடத்த சொல்லவில்லை என்றும் ஆசிரமத்தில் விட்டுவிடுமாறு சொன்னதாகவும் விஜயா சப்பைகட்டு கட்டுகிறார். பின்னர் இனிமேல் இப்படியெல்லாம் பண்ணமாட்டேன் என விஜயா சொன்னதை அடுத்து அவரை மன்னித்துவிடுகிறார் அண்ணாமலை. மறுபுறம் கிரிஷை மனோஜுடன் நெருக்கமாக்க அவனை இனி நம்ம ரூமில் படுக்க வைத்துக் கொள்ளலாம் என ரோகிணி முடிவெடுக்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.