பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!

Published : Dec 04, 2025, 10:14 PM IST

Chamundeshwari Emotionally Blackmail : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய 1053ஆவது எபிசோடில் கார்த்திக் உடன் செல்ல முடிவு செய்த ரேவதியை தடுத்து நிறுத்த துப்பாக்கியை காட்டி பிளாக்மெயில் செய்துள்ளார்.

PREV
19
கார்த்திகை தீபம் 2 சீரியல்

கார்த்திகை தீபம் 2 சீரியலில் தனது அத்தை மற்றும் தாத்தாவின் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைக்க கிராமத்திற்கு வந்தவர் தான் கார்த்திக். வந்த இடத்தில் கோயிலை திறந்து மாமாவின் கையால் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துவேன் என்று ஊரார் முன்னிலையில் வாக்கு கொடுத்தார். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், முதல் முயற்சியின் போது அம்மாவை இழந்தார். கோயில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் போது சாலை விபத்தில் கார்த்திக்கின் அம்மா உயிரிழந்தார்.

29
கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரி

2ஆவது முயற்சியில் தான் பூகம்பம் வெடித்தது. ஏனென்றால், ராஜா சேதுபதியின் உண்மையான பேரன் என்பதை மறைத்து கார்த்திக் தனது அத்தை சாமுண்டீஸ்வரி வீட்டில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனதில் இடம் பிடித்து நம்பிக்கையானவர் என்று பெயர் பெற்றார். மேலும், அவரை அவரது குடும்பத்தையும் ஆபத்திலிருந்து காப்பாற்றினார். ஒரு கட்டத்தில் தனது அத்தையின் விருப்பத்திற்காக ரேவதிக்கு விருப்பமே இல்லாமல் அவரை திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டது.

39
ரேவதி

நாளடைவில் ரேவதிக்கு கார்த்திக் யார் என்ற உண்மை தெரிய வர ஆரம்பித்தது. பின்னர் கார்த்திக்கை காதலிக்க ஆரம்பித்தார். ஆனால், கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்து ஆதங்கப்பட்டார். பின்னர் அவரைப் போன்று தானும் கார்த்திக்கை காதலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரை காதலித்தார். தனது காதலை கார்த்திக்கிடமும் சொல்லிவிட்டார். இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்க ஆரம்பித்தனர்.

49
சாமுண்டீஸ்வரி

இந்த நிலையில் தான் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த கார்த்திக் 2ஆவது முறையாக முயற்சிகள் எடுத்தார். ஆனால், அதை தடுக்க சிவனாண்டி, காளியம்மாள், முத்துவேல் மற்றும் சந்திரகலா ஆகியோர் திட்டமிட்டனர். இதற்காக வெடிகுண்டு ஏற்பாடு செய்து கோயிலில் 2 இடங்களில் வைத்தனர். ஒரு இடத்தில் வைத்தது பற்றி அவரே சொல்லிவிட்டார். மற்றொரு இடத்தில் வைத்தது பற்றி சொல்ல வேண்டுமானால், நீ யார் என்ற உண்மையை கும்பாபிஷேகம் நடப்பதற்குள் சொல்ல வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்.

59
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு

கார்த்திக்கும் வேறு வழியில்லாமல் தான் யார் என்ற உண்மையை சொல்லிவிட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சாமுண்டீஸ்வரி ஆத்திரத்தில் தலையில் தண்ணீரை ஊற்றி இனிமேல் இந்த ஊருக்கும், இந்த குடும்பத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். மேலும், தாலியை வைத்து பிளாக்மெயில் செய்து கணவரையும், மகள்களையும் அங்கிருந்து கூட்டிக் கொண்டு சென்றார். ரேவதி வர முடியாது என்று சொல்லியும் அவரை கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றார்.

69
கார்த்திகை தீபம் 2 சீரியல்

இந்த நிலையில் தான் இன்றைய 1052ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான புரோமோ வீடியோவை ஜீ தமிழ் வெளியிட்டது. இதில், இந்த ஊர் உலகத்தில் எங்கு தேடினாலும் இப்படியொரு புருஷன் எனக்கு கிடைக்கமாட்டார். என்னை கண்ணைப் போன்று பாதுகாத்துக் கொள்ளும் பிரியமான மனுஷன். எப்பவோ நடந்த ஒரு விஷயத்திற்காக நீ என்னுடைய வாழ்க்கையை அழிக்க முடியாது. என்னுடைய வாழ்க்கை இவருடன் தான்.

79
ரேவதியை பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி

நான் இவருடன் தான் போவேன். அவர் எல்லோரையும் சேர்க்க நினைக்கும் மனுஷன். அவரை தப்பா பேசாதே. அவர் இந்த குடும்பத்திற்காக செய்த எல்லாவற்றையும் நீ துச்சமாக கூட நினைக்கலாம். ஏனென்றால் உன்னுடைய ஈகோ அப்படி. ஆனால், என்னால் அப்படி நினைக்க முடியாது. ஏனா என்னுடைய உயிரே இவர் தான். இவர் இருக்கும் இடம் எப்படி இருந்தாலும், அது எனக்கு சொர்க்கம் என்று கூறி தனது உடைகளை எடுத்து வைத்தார்.

89
ரேவதி மற்றும் கார்த்திக் காட்சிகள்

அப்போது சாமூண்டீஸ்வரி தனது அறைக்கு சென்று துப்பாக்கியை எடுத்து வந்து நீ அவனுடன் சென்றால் நான் சுட்டுக் கொண்டு செத்துவிடுவேன் என்று உணர்ச்சிப்பூர்வமாக பிளாக்மெயில் செய்தார். ஆனால், ரேவதி அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. கார்த்திக்கை கையோடு கூட்டிக்கொண்டு வெளியில் நடந்தார். அப்போது ராஜா ரேவதியை வேண்டாம், நீ என்னுடன் வர வேண்டாம். அத்தை ரொம்பவே கோபமாக இருக்கிறார்கள்.

99
கார்த்திகை தீபம் 2 சீரியல்

கண்டிப்பாக ஒருநாள் புரிந்து கொள்வார்கள் என்று கூறி ரேவதியை திரும்ப வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். ஆனால், சாமுண்டீஸ்வரியோ இதெல்லாம் தன்னால் தான் நடந்தது என்று கொஞ்சம் சந்தோஷப்பட்டார். பின்னர் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு வீட்டிலிருந்த அவரது உடைகளையும் நெருப்பில் தீயிட்டார். இதையெல்லாம் பார்த்து சந்திரகலா ரசித்தார். ஆனால், ரேவதி மன வேதனை அடைந்தார்.

பின்னர் கார்த்திக் பயன்படுத்திய காரை கூட பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அதன் பின்னர் தனது சபதம் நிறைவேறிய சந்தோஷத்தில் பல்லு தெரிய சந்திரகலா சிரித்துக் கொண்டிருந்தார். யானைக்கும் அடி சறுக்கும் என்பது கார்த்திக் விஷயத்தில் உண்மையாகியுள்ளது. கார்த்திக் இப்போது தோற்று இருக்கலாம் ஆனால், அடுத்த அடி தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories