அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஊர்க்காரர்களிடம் ஷண்முகம் தர்மகத்தா தேர்தலில் நிற்க போவது இல்லை என சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி கொடுத்த 40 நாளில் அவ மனதை மாற்றி காட்டுறேன் என்று சொல்லியதை அடுத்து சௌந்தரபாண்டி ஊர்க்காரர்களிடம் ஷண்முகம் தர்மகர்த்தா தேர்தலில் நிற்க போவது இல்லை என சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
zee tamil Anna serial
அதாவது, வைகுண்டம் ஷண்முகம் அப்படி ஒன்னும் சொல்லலே அவன் தேர்தலில் நிற்பான் என்று சொல்ல வைகுண்டம் அதை அவனை இங்க வந்து சொல்ல சொல்லு என்று சொல்லி அனுப்ப வீட்டிற்கு வந்த வைகுண்டம் தர்மகர்த்தா தேர்தலில் நிற்க போவது இல்லைனு சொன்னியா? ஏன் இப்படி சொன்ன என்று கோபப்பட்டு திட்ட பரணி நிற்க வேண்டாம்னு சொன்ன விஷயத்தை சொல்கிறான். அதை கேட்டதும் வைகுண்டம் பரணி சொன்னா அதில் ஒரு காரணம் இருக்கும், அவ சொல்லிட்டா நிற்க வேண்டாம் என்று சொல்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
பிறகு பரணியிடம் இதுபற்றி மறைமுகமாக பேச போக பரணி நீங்க என்ன கேட்க வரீங்கனு எனக்கு தெரியும் மாமா, நான் எங்க அப்பா சொன்னதால் அவனை தேர்தலில் நிற்க வேண்டாம்னு சொல்லல. அவனை நம்பி 4 தங்கைகள் இருக்காங்க. ஷண்முகம் தலைவராக பொறுப்பேற்றதும் சொந்த காசை போட்டு நிறைய செலவு பண்ணிட்டு இருக்கான். அதனால் தான் இன்னொரு பதவி வேண்டாம்னு சொன்னதாக சொல்ல வைகுண்டம் பரணியின் மனதையும் சண்முகத்தின் மீது இருக்கும் அக்கறையையும் புரிந்து கொள்கிறார்.
44
Anna serial today episode
மறுபக்கம் ஜெயிலுக்குள் இருக்கும் சூடாமணி தர்மகத்தாவாக இருக்கும் சௌந்தரபாண்டி முருகன் கோவில் நகைகளை திருடி வைத்து கொள்வது போல கனவு கண்டு அலறி எழுகிறாள். சௌந்தரபாண்டி தர்மகர்த்தாவாக இருப்பதால் தான் இப்படியெல்லாம் செய்கிறான், அந்த பதவியை அவனிடம் இருந்து பறிக்க வேண்டும் என்று சூடாமணி முடிவெடுக்க இதே நேரத்தில் ஷண்முகம் அவளை பார்க்க ஜெயிலுக்கு வருகிறாள். இதனால் சூடாமணி இது எல்லாம் முருகனோட வேலை தான் என அறிந்து கொண்டு இது பற்றி ஷண்முகத்திடம் பேச முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.