MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சூப்பர்ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா? அவரின் Net Worth விவரம் இதோ

சூப்பர்ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா? அவரின் Net Worth விவரம் இதோ

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 27 2023, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Rajinikanth daughter Aishwarya

Rajinikanth daughter Aishwarya

கோலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரஜினிக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இதில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் ஆனது. காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா.

26
aishwarya rajinikanth

aishwarya rajinikanth

இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் 3. இப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தான் தற்போது கோலிவுட்டில் சென்சேஷன் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் அறிமுகமானார். அதுவும் இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி ஓவர்நைட்டில் உலகளவில் ரீச் ஆனது. 3 படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படத்திற்கு காதலர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

36
Aishwarya dhanush

Aishwarya dhanush

3 படத்தை தொடர்ந்து வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. கெளதம் கார்த்திக், விவேக் நடிப்பில் வெளியான இப்படத்தில் நடிகர் தனுஷும் கொக்கி குமாராக கேமியோ ரோலில் வந்து அசத்தினார். இப்படத்திற்கும் பெரியளவில் வரவேற்பு கிடைக்காததால் சினிமாவுக்கு பிரேக் விட்ட ஐஸ்வர்யா பிட்னஸ் மற்றும் மகன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

46
Lal salaam director aishwarya rajinikanth

Lal salaam director aishwarya rajinikanth

இருவரும் விவாகரத்து பெறவில்லை என்றாலும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். தனுஷ் உடனான பிரிவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய ஐஸ்வர்யா, லால் சலாம் என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளார். அதோடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

56
aishwarya rajinikanth salary

aishwarya rajinikanth salary

லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து விவரம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி ஐஸ்வர்யாவுக்கு ரூ.40 கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இவருக்கு சொந்தமாக ஒரு சொகுசு வீடும் உள்ளது. மேலும் கோடிக்கணக்கில் தங்க, வைர நகைகளை வாங்கி குவித்து வைத்துள்ளார் ஐஸ்வர்யா.

66
aishwarya rajinikanth net worth

aishwarya rajinikanth net worth

சினிமா மட்டுமின்றி பிரபல நிறுவனங்களில் ஷேர் ஹோல்டராகவும் இருக்கும் ஐஸ்வர்யா அதன்மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். இவரிடம் பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஒருபடத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இவர் இயக்குனராக மட்டுமின்றி பாடகராகவும் தன் திறமையை நிரூபித்துள்ளார். விசில், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் ஐஸ்வர்யா பாடல்களை பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அறம் பட இயக்குனரின் அகரம் காலனி பட ஷூட்டிங்கில் விபத்து... மின்சாரம் தாக்கி லைட் மேன் பலி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved