எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி பிசினஸ் நடத்தும் இடத்தில் வேலை கேட்டு வந்துள்ள பெண், ஆதி குணசேகரன் அனுப்பிய ஆளாக இருக்க வாய்ப்பு உள்ளது. இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் நடத்தி வரும் தமிழ் சோறு பிசினஸ் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், அதில் ஏதாச்சும் குட்டையை குழப்பிவிட ஆதி குணசேகரன் பல்வேறு வேலைகளை பார்க்கிறார். அதில் ஒன்றாக அறிவுக்கரசியை ஏவிவிட்டு, சாப்பாட்டில் கரப்பான் பூச்சியை கலக்க வைத்தார். ஆனால் அதைக் கண்டுபிடித்த ஜனனி, இனி அவர்களை கிச்சனுக்குள்ளேயே விடக்கூடாது என முடிவு செய்கிறார். ஆனால் அதையும் மீறி கிச்சனுக்குள் சென்று நெய் பாட்டிலில் பேதி மருந்தை கலக்கிவிடுகிறார் முல்லை. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
மயக்கம் போட்டு விழுந்த பெண்
நெய்யை கடைக்கு எடுத்துச் சென்ற நிலையில், அங்கு தாலிப்பதற்காக நெய்யை நந்தினி எடுக்கும் போது அங்கு வேலை கேட்டு வரும் பெண், தெரியாமல் அந்த நெய்யை தட்டிவிடுகிறார். அதனால் அந்த பாட்டில் கீழே விழுந்து உடைந்ததில் நெய் முழுவதும் வீணாய் போகிறது. இதனால் அந்த பெண் அந்த நெய்யை எடுத்து சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுந்துவிடுகிறார். இதைப் பார்த்து பதறிப்போன ஜனனி, அவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திக்கு செல்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த பின் மீண்டும் கடைக்கு அழைத்து வருகிறார்.
34
ஜனனி சொன்ன ஷாக்கிங் தகவல்
அப்போது எதுவும் பிரச்சனை இல்லையே என விசாரிக்கிறார் நந்தினி. அதெல்லாம் ஒன்னும் இல்ல அக்கா என்று சொல்லி ஒரு பகீர் தகவலை கூறுகிறார். அந்த கிளாஸ் பாட்டில் கீழே விழுந்தபோது அதில் இருந்த நெய்யை அவங்க சாப்பிட்டாங்கள்ல அதில் ஏதோ கலந்திருக்கிறது. அதுனால தான் அவங்களுக்கு ஏதோ ஆகியிருக்கு என சொல்கிறார். பின்னர் அந்த பெண்ணிடம் சென்று, நன்றி சொல்லும் நந்தினி, சாமி தான் உன்னை அனுப்பி இருக்கு. உன்னை தெரியாம திட்டிட்டேன் என மன்னிப்பு கேட்கிறார் நந்தினி. பின்னர் அவருக்கு சப்பாடு போட்டுக் கொடுக்க சொல்கிறார் நந்தினி.
பின்னர் தன்னுடைய சோகக் கதையை சொல்லும் அந்த பெண், என் புருஷன் ஒரு குடிகாரன். வேலைக்கு போகாம குடிச்சு குடிச்சு டார்ச்சர் பண்ணுறான். எனக்கு ஒரு பொம்பள புள்ள இருக்கு, அதைக் காப்பாற்ற தான் நான் இங்க வேலை கேட்டு வந்திருக்கேன் என ஃபீல் பண்ணி பேசுகிறார். இதைக்கேட்டு மனம் இறங்கும் ஜனனி வேலை கொடுக்க சம்மதித்துவிடுவார் போல தெரிகிறது. அநேகமாக அந்தப் பெண் ஆதி குணசேகரன் அனுப்பிய ஆளாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் தான் அந்த நெய்யை வேண்டுமென்றே சாப்பிட்டு சிம்பதி வரவைத்திருக்கிறார். அந்தப் பெண்ணால் தான் ஜனனிக்கு இனி பிரச்சனை காத்திருக்கிறது. அது என்ன என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.