பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயிலுக்குப் போட்டது கவரிங் நகை என்ற உண்மையை மீனா உடைக்கிறார். போலீஸ் விசாரணையில் பாக்கியம் தன் மகளை மிரட்டிப் பொய் சொல்ல வைக்க, மீனா தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறி அதிர்ச்சி அளிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இதுவரை மறைக்கப்பட்ட ரகசியங்கள் அனைத்தும் வெட்டவெளிச்சத்திற்கு வரும் நேரம் வந்துவிட்டது. நகையைச் சுற்றி நடந்த நாடகங்களை மீனா அதிரடியாக உடைக்க, மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போயுள்ளது.
தாலி பிரித்து கோர்க்கும் வைபவத்தின் போதே, தங்கமயில் அணிந்திருந்தது கவரிங் நகை என்பது தனக்குத் தெரியும் என்று மீனா அனைவர் முன்னிலையிலும் போட்டு உடைக்கிறார். பாக்கியம் இதைச் சமாளிக்க முயன்றாலும், மீனாவும் ராஜியும் உறுதியாக நின்று உண்மையை உரக்கச் சொல்கின்றனர். பாக்கியமும் அவரது கணவரும் இது குறித்து ரகசியமாகப் பேசிக் கொண்டதை நேரில் கேட்டதாக ராஜி சாட்சி சொல்ல, பாண்டியன் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.
24
பாக்கியத்தின் விடாக்கண்டன் வாதம்
விஷயம் போலீஸ் வரை சென்றும் பாக்கியம் தனது பொய்யை மாற்றிக்கொள்ளவில்லை. "80 பவுன் நகை கொடுத்தது உண்மைதான், அதைத் திரும்பப் பெறவே போராடுகிறேன்" என அவர் சாதித்து வருகிறார். ஆனால் மீனா, போலி நகை கொடுத்ததற்குத் தானும் தன் தங்கை ராஜியுமே சாட்சி என போலீசாரிடம் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். தங்கமயிலின் வாழ்க்கைக்காகவே இவ்வளவு காலம் பொறுமையாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
மருமகள்கள் மீது பாய்ந்த பாண்டியன்
மனைவி ஒருபுறம் பாக்கியத்தின் குடும்பம் சிக்கினாலும், மறுபுறம் உண்மையை மறைத்ததற்காக மீனா மற்றும் ராஜி மீது பாண்டியனும் அவரது மனைவியும் கோபம் கொள்கின்றனர். "மூன்று மருமகள்களும் சேர்ந்து எதையெல்லாம் மறைக்கிறீர்கள்?" என மாமியார் ஆவேசமாகக் கேட்க, குடும்பத்திற்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி மீனா மற்றும் ராஜியைத் திட்டுகின்றனர். இதனால் போலீஸ் நிலையமே ரணகளமானது.
34
பாக்கியத்தின் மாஸ்டர் பிளான்: மிரளும் தங்கமயில்
போலீஸ் நிலையத்திற்கு வந்த தங்கமயிலைத் தனியாக அழைத்த பாக்கியம், "தாலி பிரித்துக் கோர்க்கும் போது எதுவுமே நடக்கவில்லை என்று சொல்ல வேண்டும்" என வற்புறுத்துகிறார். உண்மையைச் சொன்னால் சரவணனுடன் வாழும் வாய்ப்பு பறிபோகும் என்றும், நகை மோசடியில் தாங்கள் கைதாக நேரிடும் என்றும் கூறி மகளை பயமுறுத்துகிறார்.
க்ளைமாக்ஸ் திருப்பம்: மீனாவிடம் உள்ள 'அந்த' வீடியோ!
போலீஸ் விசாரணையில், தன் அம்மாவின் பேச்சை கேட்டு "நான் போட்டிருந்தது 80 பவுன் தங்க நகை தான்" என மயில் பொய் சொல்கிறார். மயில் தன்னை நிரபராதி போலக் காட்டிக்கொள்ள முயல, பொறுமையிழந்த மீனாவும் ராஜியும் இறுதி ஆயுதத்தை எடுக்கின்றனர். தாலி பிரித்துக் கோர்க்கும் அன்று மொட்டை மாடியில் இவர்கள் மூவரும் பேசியது தொடர்பான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக மீனா கூற, பாக்கியம் குடும்பம் மொத்தமாக ஷாக் ஆனது.
சரவணன் மீது வைத்திருக்கும் பாசம் உண்மை என்றால் உண்மையை ஒப்புக்கொள் என மீனா கூற, மயில் கண்ணீருடன் சரவணனைப் பார்ப்பதுடன் இந்த எபிசோட் விறுவிறுப்பாக முடிகிறது.