எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் ஃபுட் டிரக் பிசினஸை இழுத்து மூட வைக்க ஆதி குணசேகரனுடன் சேர்ந்து அறிவுக்கரசியில் பல கோல்மால் வேலைகளை பார்த்து வருகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் தமிழ் சோறு பிசினஸை இழுத்து மூடி சீல் வைக்க அறிவுக்கரசி, அவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த பிரியாணியில் கரப்பான் பூச்சிகளை போட்டிருந்தார். இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை வரவைத்து ஜனனியின் தமிழ் சோறு பிசினஸை முழுவதுமாக மூட வைக்க பிளான் போட்டனர். ஃபுட் டிரக்கையும், அங்கிருந்த உணவுகளையும் சோதனை செய்த அதிகாரிகள், அனைத்தும் தரமாக இருப்பதாக கூறி ஜனனியை பாராட்டி சென்றனர். இதனால் ஆதி குணசேகரன் ஷாக் ஆகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
அறிவுக்கரசி பிளான் சொதப்பல்
அறிவுக்கரசி கிச்சனி்ல் இருந்ததால் சந்தேகம் அடைந்த ஜனனி, அவர் ஏதாவது சில்லறை வேலை செய்திருப்பார் என சந்தேகப்பட்டு, பிரியாணியை திறந்து பார்த்தபோது அதில் கரப்பான் பூச்சிகள் இருப்பதை பார்த்ததும் அந்த டபராவை மட்டும் தனியாக எடுத்து வைத்ததால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பித்துவிட்டார். பின்னர் வீட்டுக்கு வந்ததும் நம்மளை பொழக்கப்போகிறார்கள் என்கிற பதற்றத்தில் அறிவுக்கரசி இருக்க, அவரை கண்டுகொள்ளாதபடி இருக்கிறார் ஜனனி. அதேபோல் இன்று வியாபாரம் அமோகமாக நடந்ததாக ஜனனி சொன்னதைக் கேட்டதும் அறிவுக்கு வயிறு எரிகிறது.
34
அறிவுக்கு ஆர்டர் போட்ட கதிர்
மறுபுறம் ஜனனி செய்யும் சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்துவிடலாம் என ஐடியா கொடுக்கிறார் கரிகாலன். பின்னர் அறிவுக்கரசிக்கு போன் போட்டு பேசும் கதிர், நாளைக்கு நீ எதாச்சும் பிரச்சனை பண்ணியே ஆக வேண்டும். அந்த கிறுக்குப்பயல வச்சு பண்ணப்போறியா, இல்ல நீயே இறங்கி பண்ணப்போறியானுலாம் எனக்கு தெரியாது. எதாச்சும் பண்ணு என சொல்லி போனை கட் பண்ணிவிடுகிறார். கிச்சனில் மருமகள்களுடன் பேசிக் கொண்டிருக்கும் விசாலாட்சி, ஈஸ்வரியை நினைத்து ஃபீல் பண்ணுகிறார். அவ திரும்ப வந்ததும் தங்க தாம்புலத்தில் வச்சு தாங்குவேன் என கூறுகிறார்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மாடியில் ரூமுக்குள் சென்று ரொமாண்டிக் ஆக சக்தியிடம் பேசிக் கொண்டிருக்கும் ஜனனி, குழந்தை பெற்றுக்கொள்ளலாமா என கேட்கிறார். அதற்கு சக்தி, அது நான் ஆசைப்பட்டது தான், ஆனால் நீ போராடி ஜெயிச்சுகிட்டிருக்கிற இந்த நேரத்துல, நீ எந்தவித கஷ்டமும் படக்கூடாதுனு நான் நினைக்குறேன் என சக்தி சொன்னதும் அவரைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறார் ஜனனி. இப்படி இவர்கள் ஒருபக்கம் ரொமான்ஸ் செய்துகொண்டிருக்க, மறுபக்கம் இவர்கள் பிசினஸை எப்படிடா இழுத்து மூட வைக்கலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார் அறிவுக்கரசி. இதையடுத்து என்ன ஆகப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.