அர்ஜுன் கொடுத்த ஷாக்.. டிவோர்ஸ் நோட்டீஸில் கையெழுத்திட்ட சத்யா! ஆடுகளம் சீரியலில் உடைந்தது அர்ஜுன் - சத்யா பந்தம்?

Published : Feb 17, 2026, 04:39 PM IST

Sathya Signs Arjun Divorce Notice: ஆடுகளம் சீரியல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட சொன்ன அர்ஜுன் மறுக்காமல் சத்யாவும் கையெழுத்திட்டார் ஆனால் எதிர்பாக்காத விதமாக சத்யா கர்ப்பமாகியுள்ளார் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Aadukalam Serial Today Episode Promo

அர்ஜுனின் விபரீத முடிவு: சத்யா மீது சந்தேகப்பட்டு அர்ஜுன் தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் சத்யா அவரை தடுத்து நிறுத்தி நான் உனக்கு என்ன செய்யனும் சொல்லு என்கிறார் சத்யா அதற்கு அர்ஜுன் எனக்கு டிவோர்ஸ் வேணும் என்று சொல்கிறார்.சரி நான் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

25
Aadukalam Serial Sathya Sign in Divorce Notice

வழக்கறிஞரிடம் செல்லும் அர்ஜுன் மற்றும் சத்யா: இருவரும் மறுநாள் காலையில் விவாகரத்து பெறுவதற்காக அர்ஜுன் சத்யாவை அழைத்துக் கொண்டு வழக்கறிஞரிடம் செல்கின்றனர். அங்கு சென்று எங்களுக்கு டிவோர்ஸ் வேணும் என்று அர்ஜுன் சொல்ல அதற்கு வழக்கறிஞர் என்ன பிரச்சனைக்காக நீங்க டிவோர்ஸ் செய்றீங்க என்று கேட்கின்றார். எங்களுக்கு வாழ பிடிக்கல அண்டர்ஸ்டாண்டிங் இல்லை என்றெல்லாம் சொல்கின்றார் அதன் பிறகு விவாகரத்து பத்திரத்தை கொடுக்கிறார் வழக்கறிஞர் அதனை பெற்ற அர்ஜுன் அதில் தயக்கமின்றி கையெழுத்திட்டார். 

35
Sathya And Arjun Divorce

அதனை சத்தியா பார்த்து அழுது கொண்டே இருக்கிறார். அதன் பிறகு அர்ஜுன் அந்த பத்திரத்தை சத்யாவிடம் கொடுக்க பின்னணியில் பாட்டு ஒலிக்கிறது. "என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேரென்னவென கேட்பேன்"என்ற சோகமான பாட்டு ஒலிக்க சத்யா அந்த பத்திரத்தை எடுத்து அதில்மனமின்றி, தவிப்புடன் ,மனவலி உடன் அழுது கொண்டே கையெழுத்திடுகிறார். அதை பார்த்துக்கொண்டே இருக்கிறார் அர்ஜுன்.

45
சத்யாவுடன் சண்டையிடும் தேவி:

அக்கா எனக்கு கொஞ்சம் உதவி வேண்டும் என்று தேவியிடம் உதவி கேட்க தேவி சத்யாவுடன் சண்டை இடுகிறார் கோபம் உடனே பேசுகின்றார். கோபத்தில் நான் எப்படி இந்த வீட்டுக்கு மருமகளோ அதே மாதிரி தான் நீயும் இந்த வீட்டுக்கு மருமகள் என்று சொல்லிவிடுகிறார் அதனை கேட்டு வருத்தத்துடன் சத்யா வெளியேறுகிறார்.

55
தன் தோழியை சந்தித்து பேசும் சத்யா:

தன் தோழியை சந்தித்து சத்யா நடந்ததை கூறுகிறார். அர்ஜுனுக்கு டைவர்ஸ்ல கேக்குறாரு நான் என்ன பண்றது அவர் கேட்கிறதா நான் பண்ணி தான குடுக்கணும் என்று அனைத்தையும் கூறுகிறார். ஒரு தோழி உங்க அக்கா வாழ்க்கைக்கு நல்லது செல்ல போய் உன் வாழ்க்கை கெட்டதுல முடிஞ்சிருச்சே என்று கூறுகிறார். திடீரென்று மயக்கம் ஏற்படுகிறது சத்யா கீழே விழுகிறார் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார் பிரியா. மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு சத்தியா கர்ப்பமுடன் இருக்கிறார் என்று கூறுகிறார் அதிர்ச்சியில் இருக்கின்றன சத்யா மற்றும் பிரியா இதன் இத்துடன் இந்த எபிசோடு முடிவடைகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories