காதல் பரிசால் ரேவதியை உருகவைத்த கார்த்திக்! கண்கலங்கிய ரேவதி.. கார்த்திகை தீபம் சீரியலில் நெகிழ்ச்சி சம்பவம்!

Published : Feb 17, 2026, 03:05 PM IST

Karthik Love Gift Revathi in Karthigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் காதலர் தின பரிசாக கார்த்திக் தனது காதல் மனைவி ரேவதிக்கு பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியுள்ளார்.

PREV
16
கார்த்திக் ரேவதி காதல் பரிசு

Karthik Love Gift Revathi in Karthigai Deepam Serial : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இதில் கடந்த வார எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தயாரான காட்சிகள் இடம் பெற்றன. இந்த நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் 1124ஆவது எபிசோடாக என்ன நடந்தது என்பது பற்றி ஹைலைட்ஸாக பார்க்கலாம்.

26
ரேவதியை மெய்சிலிர்க்க வைத்த கார்த்திக்

இதில், கார்த்திக் ஏற்பாடு செய்து வைத்த காதலர் தின கொண்டாட்டத்திற்கு ரேவதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அழைத்து வந்தார். முதலில் கார்த்திக் தான் அணிந்திருக்கும் டிரஸிற்கு ஏற்ப ரேவதிக்கு புதிய டிரஸ் வாங்கிக் கொடுத்தார். இருவரும் ஒரே கலரில் டிரஸ் போட்டு காதலர்களை குஷிப்படுத்தினர். அந்த டிரஸில் தான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டு ரேவதி சந்தோஷப்பட்டுக் கொண்டார். பின்னர், ரேவதியின் கண்ணை மூடிக் கொண்டு கார்த்திக் சர்ஃப்ரைஸ் அறைக்கு கூட்டி கொண்டு வந்தார்.

36
கார்த்திக் கொடுத்த காதல் பரிசு

அதில் அறை முழுவதும், சீரியல் லைட்ஸ் மின்ன, ஹார்ட்டீன் பலூன் மற்றும் காதலர் தின வாழ்த்துக்களுடன் காதலிக்கும் காதல் ஜோடிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அந்த அறை நிரம்பியிருந்தது. அதோடு, போகி பண்டிகையின் போது சந்திரகலா தீயிலிட்ட கார்த்திக் மற்றும் ரேவதியின் திருமண புகைப்படத்தை காதலர் தின வாழ்த்து என்று குறிப்பிட்ட போட்டோவை பரிசாக கொடுத்து அசத்தினார்.

46
கார்த்திகை தீபம் கார்த்திக் ரேவதி ரொமான்ஸ்

அதைப் பார்த்து சந்தோஷப்பட்ட ரேவதி, தனது திருமண வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை நினைவு கூர்ந்தார். மேலும், கார்த்திக்கை பிடிக்காமல் தான் திருமணம் செய்து கொண்டது பற்றியும், ரொம்பவே அவமானப்படுத்தியது பற்றியும் கூறி வருத்தப்பட்டுக் கொண்டார். ஆனால், கார்த்திக்கோ, அத்தை மற்றும் பாட்டியின் கட்டாயத்தினால் தான் உன்னை திருமணம் செய்து கொண்டேன். ஆனால், திருமணத்திற்கு பிறகு தனது மனைவிக்கு எந்தவித கஷ்டமும் கொடுக்க கூடாது, அவரை சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்ப்பட்டதாக கூறினார்.

56
கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதிக்கு கார்த்திக் கொடுத்த கிப்ட்

இதைத் தொடர்ந்து கார்த்திக் ஆர்டர் செய்து வைத்திருந்த கேக் வந்தது. இருவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர். பின்னர் இருவரும் பார்வையால் பேசிக் கொண்ட காட்சி ரசிகர்களை வியக்க வைத்தது. இப்படியே அந்த அறை முழுவதும் கார்த்திக் மற்றும் ரேவதியின் காதல் காட்சிகளால் நிரம்பியிருந்தது. அதோடு ரேவதிக்கு தங்க மோதிரம் பரிசாக கொடுத்து அவரை வியக்க வைத்தார்.

66
கார்த்திக் ரேவதி திருமண வாழ்க்கையில் அடுத்த திருப்பம்

அதோடு கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் மற்றும் ரேவதியின் காதல் காட்சிகள் இந்த எபிசோடு உடன் முடிந்தது. இனி அடுத்த எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories