Free WiFi-ல் UPI, பேங்கிங் பயன்படுத்துபவரா நீங்கள்? உடனே உங்க அக்கவுண்ட்டை செக் பண்ணுங்க!

Published : Jul 18, 2026, 09:11 AM IST

Free WiFi Safety Tips: பொதுஇடங்களில் இலவச Wi-Fi பயன்படுத்தும்போது கவனமாக இல்லாவிட்டால் உங்கள் பேங்க் பேலன்ஸ் மொத்தமாக காலியாகி விடும். இலவச Wi-Fi பயன்படுத்தும்போது மனதில் வைக்க வேண்டிய 5 விதிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
Free WiFi Safety Tips - Free WiFi-ல் ஒளிந்திருக்கும் ஆபத்து

"Free WiFi Available" என்ற போர்டைப் பார்த்ததும் உடனே போனில் நெட்டை ஆன் செய்துவிடுவீர்களா? மெட்ரோ, ரயில் நிலையம், கஃபே, மால் போன்ற இடங்களில் இலவச நெட் கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், இந்த "இலவசம்" என்ற வார்த்தைக்குப் பின்னால் மிகப்பெரிய ஆபத்து மறைந்துள்ளது. பொது இடங்களில் கிடைக்கும் Wi-Fi தான் ஹேக்கர்களின் புகலிடம் என சைபர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சிறிய தவறு உங்க பேங்க் பேலன்ஸை காலி செய்து விடும்

சும்மா YouTube, WhatsApp தானே பார்க்கிறோம், என்ன ஆகிவிடப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இலவச Wi-Fi நெட்வொர்க்கில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஹேக்கர்களால் கண்காணிக்க முடியும். ஒரு சிறிய தவறு செய்தால்கூட, உங்கள் UPI PIN, வங்கி பாஸ்வேர்டு, போனில் உள்ள புகைப்படங்கள் என அனைத்தும் அடுத்தவர் கைக்குச் சென்றுவிடும்.

இதையும் படிங்க: Ceiling Fan Tips: ஃபேன் காற்று கம்மியா இருக்கா? ஜெட் வேகத்தில் சுற்ற வைக்கும் 5 சிம்பிள் டிப்ஸ்!

24
இலவச Wi-Fi-ஐ பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை

அப்படியென்றால், இலவச Wi-Fi-ஐ பயன்படுத்தவே கூடாதா? பயன்படுத்தலாம், ஆனால் இந்த 5 விதிகளை கண்டிப்பாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

முதல் விதி: ஆன்லைன் பேங்கிங் மற்றும் UPI பரிவர்த்தனைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். இலவச Wi-Fi-ல் இருக்கும்போது PhonePe, GPay, வங்கி செயலிகள் அல்லது கார்டு விவரங்களைப் பயன்படுத்த வேண்டாம். ஹேக்கர்கள் "Man in the Middle" என்ற தாக்குதல் மூலம் உங்கள் அனைத்து தகவல்களையும் திருடிவிடுவார்கள். பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டியிருந்தால், உங்கள் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துங்கள்.

இரண்டாவது விதி: நெட்வொர்க்கின் பெயரை கவனமாகச் சரிபார்க்கவும். "Station_Free_WiFi" மற்றும் "StationFreeWiFi1" பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். ஹேக்கர்கள் உண்மையான நெட்வொர்க்கின் பெயரில் போலியான நெட்வொர்க்குகளை உருவாக்குவார்கள். தவறான நெட்வொர்க்கில் இணைந்தால், உங்கள் எல்லா டேட்டாவும் அவர்களுக்குச் சென்றுவிடும். எனவே, இணைக்கும் முன் அங்குள்ள ஊழியர்களிடம் சரியான பெயர் என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படிங்க: IRCTC New Beta Website: தட்கல் டிக்கெட் இனி மின்னல் வேகத்தில் புக் செய்யலாம்.. புது வெப்சைட் வந்தாச்சு!

34
ஆட்டோ கனெக்ட் ஆப்ஷனை ஆப் செய்யுங்கள்

மூன்றாவது விதி: Auto Connect மற்றும் File Sharing ஆப்ஷன்களை அணைத்து வைக்கவும். உங்கள் போன் செட்டிங்ஸில் "Auto Join" மற்றும் "File Sharing" ஆப்ஷன்களை ஆஃப் செய்துவிடுங்கள். இல்லையென்றால், உங்கள் போன் தானாகவே ஏதாவது ஒரு இலவச நெட்வொர்க்கில் இணைந்துவிடும். File Sharing ஆன் செய்யப்பட்டிருந்தால், உங்கள் போனில் உள்ள புகைப்படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை மற்றவர்கள் பார்க்க முடியும்.

நான்காவது விதி: VPN பயன்படுத்தவும். VPN என்பது உங்கள் நெட்வொர்க் டேட்டாவை ஒரு பாதுகாப்பான பெட்டிக்குள் பூட்டி வைப்பது போன்றது. இதனால் ஹேக்கர்களால் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. Play Store-ல் பல இலவச VPN செயலிகள் உள்ளன. இலவச Wi-Fi-ஐப் பயன்படுத்துவதற்கு முன், ஒரே கிளிக்கில் VPN-ஐ ஆன் செய்துகொள்ளுங்கள். இதுதான் மிக முக்கியமான பாதுகாப்பு.

44
Wi-Fi-ஐ நெட்வொர்க்கை பார்கெட் செய்து விடுங்கள்

ஐந்தாவது விதி: உங்கள் வேலை முடிந்ததும் Wi-Fi-ஐ மறந்துவிடுங்கள் (Forget). வேலை முடிந்தவுடன் போனில் Wi-Fi-ஐ ஆஃப் செய்துவிட்டு, செட்டிங்ஸ் சென்று அந்த நெட்வொர்க்கை "Forget" செய்துவிடுங்கள். இல்லையென்றால், அடுத்த முறை நீங்கள் அந்தப் பகுதிக்குச் செல்லும்போது உங்கள் போன் மீண்டும் அதே நெட்வொர்க்கில் தானாகவே இணைந்துவிடும்.

இலவச Wi-Fi தவறல்ல, ஆனால் நமது கவனக்குறைவுதான் தவறு. 2 நிமிட வசதிக்காக 2 லட்ச ரூபாயை இழக்க விரும்ப மாட்டீர்கள் அல்லவா? எனவே, அடுத்த முறை "Free WiFi" என்று பார்த்தால், இந்த 5 விஷயங்களையும் நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு நெட்டை ஆன் செய்யுங்கள்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories