WhatsApp Web பயன்படுத்தும் அரசு ஊழியர்களே உஷார்! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை

Published : Nov 23, 2026, 07:02 PM IST

WhatsApp Web வசதி அலுவலகப் பணிகளை எளிதாக்கினாலும், பாதுகாப்பில் சிறிய கவனக்குறைவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைத் தடுக்க இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் 7 முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

PREV
15
WhatsApp Web பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

அலுவலகக் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் WhatsApp Web பயன்படுத்துவோருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு நவம்பர் 18-ஆம் தேதி வெளியிட்ட அறிவுறுத்தலில், ஏற்கெனவே இணைக்கப்பட்ட WhatsApp Web கணக்குகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட செய்திகள், தொடர்பு எண்கள், குழு உரையாடல்களைப் பார்க்க முடியும். மேலும், கணக்கின் உரிமையாளரைப் போலவே மற்றவர்களுக்கு செய்திகள் அனுப்பி பண மோசடி, போலிச் செய்திகள் மற்றும் ரகசியத் தகவல் திருட்டிலும் ஈடுபட முடியும்.

25
அரசு ஊழியர்கள் ஏன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்?

அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியத் தகவல்களைக் கையாளும் நிறுவனங்களில் கணினிகளைப் பலரும் பயன்படுத்தக்கூடும். இத்தகைய சூழலில் WhatsApp Web கணக்கு இணைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தால், மற்றவர்கள் அதை அணுகும் அபாயம் உள்ளது. இதனால் அரசு நிர்வாக ஆவணங்கள், நிதி விவரங்கள், நிறுவன ரகசியங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் தவறான நபர்களிடம் செல்லக்கூடும். எனவே அரசு தொடர்பான பணிகள், நிதி விவரங்கள் மற்றும் ரகசியத் தகவல்களை கணினியில் உள்ள WhatsApp Web வழியாகப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தும்.

35
Browser-ஐ மூடினால் மட்டும் போதாது!

பலரும் வேலை முடிந்ததும் WhatsApp Web திறந்திருக்கும் பக்கத்தையோ, Browser-ஐயோ மூடிவிடுகின்றனர். ஆனால், இதனால் கணக்கிலிருந்து வெளியேறியதாக அர்த்தமில்லை. இணைக்கப்பட்ட கணக்கு தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொரு முறையும் பயன்படுத்தி முடித்ததும் கணக்கிலிருந்து முறையாக வெளியேற வேண்டும். கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழலில் நம்பகமான கணினியில் தனிப்பட்ட உலாவல் முறையைப் பயன்படுத்தலாம். அதன்பிறகும் கணக்கிலிருந்து வெளியேறிய பின்னரே உலாவியை மூட வேண்டும்.

45
பொது கணினிகளில் WhatsApp Web பயன்படுத்தாதீர்கள்

இணைய மையங்கள், பொது இணையக் கணினிகள், விடுதிகளின் கணினிகள், மற்றவர்களிடம் கடன் வாங்கிப் பயன்படுத்தும் கணினிகள் போன்றவற்றில் WhatsApp Web கணக்கை இணைப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், உங்கள் கணக்கிலிருந்து நீங்கள் அனுப்பாத செய்திகள் செல்வது, நண்பர்களிடமிருந்து எதிர்பாராத பதில்கள் வருவது, உங்களுக்குத் தெரியாத செயல்பாடுகள் நடைபெறுவது போன்றவற்றைக் கவனிக்க வேண்டும். இவை வேறு யாராவது உங்கள் கணக்கைப் பயன்படுத்துவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

55
கணினியைப் பாதுகாக்க 7 முக்கிய வழிமுறைகள்

இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் அறிவுறுத்தலின்படி, WhatsApp Web-ஐ நிரந்தரமாக இணைத்து வைத்திருக்கக் கூடாது; ஒவ்வொரு முறையும் பயன்படுத்திய பிறகு வெளியேற வேண்டும்; முக்கியமான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்; நம்பகமான கணினிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; கட்டாயச் சூழலில் தனிப்பட்ட உலாவல் முறையைப் பயன்படுத்த வேண்டும்; கணினியின் இயங்குதளம், உலாவி மற்றும் பாதுகாப்பு மென்பொருள்களைப் புதுப்பிக்க வேண்டும்; சந்தேகமான கோப்புகள், இணையதளங்கள் மற்றும் அனுமதியற்ற மென்பொருள்களைத் தவிர்க்க வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது தனிப்பட்ட தகவல்களையும் அலுவலகத் தரவுகளையும் பாதுகாக்க உதவும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories