இந்த சீரிஸின் மிகப்பெரிய மாற்றமாக கேலக்ஸி S27 ப்ரோ (Galaxy S27 Pro) அறிமுகமாகவுள்ளது. அல்ட்ரா மாடலின் சில முக்கிய அம்சங்களை கொண்டதாக இது இருக்கும். கேலக்ஸி S27 மாடலில் 6.3 இன்ச், S27 ப்ரோ மாடலில் 6.5 இன்ச், S27 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் மற்றும் S27 அல்ட்ரா மாடலில் 6.9 இன்ச் திரை இடம்பெறலாம். மேலும், S26 அல்ட்ராவில் அறிமுகப்படுத்தப்பட்ட 'பிரைவசி டிஸ்பிளே' (Privacy Display) தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு, S27 ப்ரோ மற்றும் அல்ட்ரா மாடல்களில் வழங்கப்பட உள்ளது. 4 மாடல்களும் 2nm தொழில்நுட்பத்தில் உருவான சிப்களைக் கொண்டிருக்கும். கேலக்ஸி S27 மற்றும் S27 பிளஸ் மாடல்களில் சாம்சங்கின் Exynos 2700 சிப்பும், S27 ப்ரோ மாடலில் குவால்காமின் Snapdragon 8 Elite Gen 6 சிப்பும், S27 அல்ட்ரா மாடலில் Snapdragon 8 Elite Extreme Gen 6 சிப்பும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
கேமரா, பேட்டரி மற்றும் மென்பொருள்
கேமரா துறையில் மிகப்பெரிய மேம்பாடுகள் S27 ப்ரோ மற்றும் அல்ட்ரா மாடல்களுக்கு வழங்கப்பட உள்ளன. இவ்விரு போன்களிலும் 200 மெகாபிக்சல் முதன்மை கேமரா (Main Camera) மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் இடம்பெறலாம். அல்ட்ரா மாடலில் 5x ஆப்டிகல் ஜூம் வசதியுடன் கூடிய 50MP டெலிபோட்டோ கேமராவும், ப்ரோ மாடலில் சற்று குறைந்த மெகாபிக்சல் கொண்ட டெலிபோட்டோ சென்சாரும் வழங்கப்படலாம்.
பேட்டரி திறனைப் பொறுத்தவரை, S27 அல்ட்ரா மாடலில் 5,500mAh பேட்டரி (60W வயர்டு மற்றும் 25W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன்) மற்றும் S27 ப்ரோ மாடலில் 5,000mAh பேட்டரி இடம்பெற வாய்ப்புள்ளது. மென்பொருளைப் பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு 17 (Android 17) அடிப்படையிலான One UI 9.5 உடன் இந்த போன்கள் வெளியாகலாம்; அத்துடன் 7 ஆண்டுகளுக்கான மென்பொருள் அப்டேட் உத்தரவாதத்தையும் சாம்சங் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.