எலும்புத் தேய்மானம் மறதி நோயை ஏற்படுத்துமா? ஏ.ஐ ஸ்கேன் ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கிய உண்மைகள்!

Published : Nov 23, 2026, 03:46 PM IST

முதுகெலும்பில் எலும்பு அடர்த்தி குறைவாக உள்ளவர்களுக்கு வயதாகும்போது அறிவாற்றல் திறன் வேகமாகக் குறைவதுடன், மூளையின் வெள்ளைப் பொருளும் விரைவாகச் சிதைவடைவதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை. ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

PREV
14
எலும்பு ஆரோக்கியம் டிமென்ஷியா தொடர்பு

பலவீனமான எலும்புகள் இதுவரை நாம் அறிந்ததை விட மூளையின் ஆரோக்கியம் குறித்துப் பல முக்கியத் தகவல்களை வெளிப்படுத்தக்கூடும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. முதுகெலும்பில் எலும்பு அடர்த்தி (Bone density) குறைவாக உள்ளவர்களுக்கு, வயதாகும்போது அறிவாற்றல் திறன் (Cognitive decline) விரைவாகக் குறைவதுடன், மூளையின் வெள்ளைப் பொருளும் (White matter) வேகமாகச் சிதைவடைவதை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை.(Johns Hopkins University) ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வட அமெரிக்க கதிரியக்கவியல் சங்கத்தின் ‘ரேடியாலஜி’ (Radiology) ஆய்விதழில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

24
ஏ.ஐ மூலம் நடத்தப்பட்ட ஆய்வு

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை. 'மெசா' (MESA) ஆய்வில் பங்கேற்ற 2,086 பேரின் மார்பு சி.டி (Chest CT) ஸ்கேன் தரவுகளை டீப் லேர்னிங் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்தனர். அவர்களில் முதுகெலும்பு அடர்த்தி அளவீடு, மூளை எம்.ஆர்.ஐ (MRI) மற்றும் அறிவாற்றல் சோதனை முடிவுகள் கொண்ட 715 பேரின் தரவுகள் இறுதி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

34
மூளையின் வெள்ளைப் பொருளில் ஏற்படும் மாற்றங்கள்

ஆய்வின் தொடக்கத்தில் முதுகெலும்பு அடர்த்தி குறைவாக இருந்தவர்களுக்கு, காலப்போக்கில் ஒட்டுமொத்த அறிவாற்றல் திறன் வேகமாகக் குறைவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, நினைவாற்றல் மற்றும் கவனத்திற்கு உதவும் 'கார்பஸ் கலோசம்' (Corpus callosum) பகுதியில் 'வெள்ளைப் பொருள் ஹைப்பர்இன்டென்சிட்டிகள்' (White matter hyperintensities) அதிகமாகச் சேர்வதும், 'இன்டர்னல் கேப்சூல்' பகுதியில் வெள்ளைப் பொருளின் கட்டமைப்புச் சிதைவதும் (Reduced fractional anisotropy) கண்டறியப்பட்டுள்ளது. இவை டிமென்ஷியா (Dementia) எனப்படும் மறதி நோய் அபாயத்துடன் தொடர்புடையவை.

44
எலும்புத் தேய்மானம் மறதி நோயை ஏற்படுத்துமா?

எலும்பு அடர்த்தி குறைவதால் நேரடியாக டிமென்ஷியா ஏற்படும் என இந்த ஆய்வு கூறவில்லை என்று விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மாறாக, வயதாகும்போது உடலில் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பு, கொழுப்புச் சமநிலையின்மை (Dyslipidemia) மற்றும் மாதவிடாய் நிறுத்த மாற்றங்கள் (Menopausal change) போன்ற பொதுவான வளர்சிதை மாற்றக் காரணிகளே எலும்பு மற்றும் மூளை ஆகிய இரண்டின் சிதைவுக்கும் காரணமாக இருக்கலாம்.

வழக்கமான சி.டி ஸ்கேன்களின் புதிய பயன்

நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை போன்ற பிற மருத்துவக் காரணங்களுக்காக எடுக்கப்படும் வழக்கமான மார்பு சி.டி ஸ்கேன்களிலிருந்தே, ஏ.ஐ உதவியுடன் முதுகெலும்பின் அடர்த்தியை அளவிட்டு, மூளைத் திறன் குறைவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகளை மருத்துவர்களால் கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எலும்பு, நரம்பியல் ஆரோக்கியத்தை முன்கூட்டியே பாதுகாக்க உதவும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories