2.1 vs 3.1 vs 5.1 சவுண்ட்பார்: எது தியேட்டர் எஃபெக்ட் தரும்? ரூம் அளவுக்கு எது பெஸ்ட்?

Published : Nov 23, 2026, 03:10 PM IST

2.1, 3.1,5.1 சவுண்ட்பார்கள் திரைப்படம் & பாட்டுக்கு எது சிறந்தது? சரவுண்ட் சவுண்ட், Dolby Atmos மற்றும் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முழு விவரம் இதோ.

PREV
14
சிறந்த சவுண்ட்பார் வாங்குவது எப்படி

டிவியில் சண்டைக் காட்சிகளின்போது சத்தத்தை அதிகரித்தால், வசனங்கள் புரியாமல் போவது பலருக்கும் ஏற்படும் சிக்கல். இதற்குத் தீர்வாக சவுண்ட்பார் (Soundbar) வாங்கும்போது, அதிக வாட்ஸ் (Wattage) என்பதைவிட அதன் சேனல் அமைப்புகளைப் (Channel Configuration) புரிந்துகொள்வது அவசியம். 2.1, 3.1 மற்றும் 5.1 சவுண்ட்பார்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் மற்றும் உங்களுக்கு எது பொருந்தும் என்பதை இங்கே பார்ப்போம்.

24
2.1 சேனல் சவுண்ட்பார்

இதில் இடது, வலது ஆகிய 2 முதன்மை சேனல்களுடன் ஒரு சப்வூஃபர் இருக்கும். டிவியின் சாதாரண ஸ்பீக்கர்களை விடச் சிறந்த ஸ்டீரியோ ஒலி மற்றும் பேஸ் (Bass) அனுபவத்தை இது தரும். சிறிய அறைகள், அன்றாட டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் கேட்பதற்கு இது போதுமானது. ஆனால், வசனங்களுக்கெனத் தனி மைய சேனல் (Centre Channel) இல்லாததால், பின்னணி இசையுடன் வசனங்கள் கலக்க வாய்ப்புள்ளது.

34
3.1 சேனல் சவுண்ட்பார்

தெளிவான வசனங்களுக்குஇதில் இடது, வலது சேனல்களுடன் தனி மைய சேனல் (Centre Channel) மற்றும் சப்வூஃபர் இருக்கும். திரைப்படங்களில் இரைச்சலான பின்னணி இசை ஒலிக்கும்போதும், கதாபாத்திரங்களின் வசனங்களை மிகத் தெளிவாகப் பிரித்துக் காட்டுவது இதன் சிறப்பம்சம். பின்புற ஸ்பீக்கர்கள் வைக்க இடவசதி இல்லாதவர்களுக்கும், சினிமா வசனங்கள் தெளிவாகக் கேட்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வு.

44
5.1 சேனல் சவுண்ட்பார்

இதில் முன் பக்க 3 சேனல்களுடன், பக்கவாட்டு அல்லது பின்புற ஒலிக்கான 2 சரவுண்ட் சேனல்கள் மற்றும் சப்வூஃபர் இருக்கும். அதிரடித் திரைப்படங்களில் நாலாபுறமும் ஒலி சூழ்ந்திருக்கும் (Surround Sound) உண்மையான ஹோம் தியேட்டர் அனுபவத்தை இது தரும். வாங்கும்போது, செயற்கை சரவுண்ட் ஒலிக்குப் பதிலாகத் தனிப் பின்புற ஸ்பீக்கர்கள் (Dedicated Rear Speakers) உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.

எதை வாங்குவது சிறந்தது?

சவுண்ட்பார் வாங்கும்போது Dolby Atmos, HDMI eARC இணைப்பு மற்றும் உங்கள் அறையின் அளவைக் கவனிக்க வேண்டும். சாதாரணத் தேவைகளுக்கு 2.1, தெளிவான வசனங்களுக்கு 3.1, மற்றும் பெரிய அறையில் தியேட்டர் அனுபவத்திற்குத் தனி ரியர் ஸ்பீக்கர்கள் கொண்ட 5.1 சவுண்ட்பாரைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனமான முடிவாகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories